அவள்-36

442 13 4
                                    

அந்நேரம் பார்த்து சிவா ,ரோஹினி, அனுவை தூக்கிய வண்ணம் ஹாஸ்பிடலினுள் நுழைந்த்தனர்.
ரோஹினி குழந்தையை சிவாவிடம் கொடுத்து விட்டு அம்மா.... என்று லதாவை அழைக்க முழுக் குடும்பமும்
ரோஹினியின் பக்கம் திரும்பியது.

ரோஹினி அழுத வண்ணமே  ஆதியை பார்த்து

அண்ணா....   உனக்கு நான்  அவ்வளோ வேண்டதவளாக ஆகிட்டனா?
அண்ணி உயிருக்காக போராடிட்டு இருக்குறாங்க. அதை கூட சொல்ல என் குடும்பத்துல யாரும் இல்ல. மூனாவதா
வெளியால ஒருத்தர் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டி இருக்கு.

ஆதி எதுவும் பேசாமல் அவளை பார்த்தவாரே இருக்க.

ரோஹினி ஆதியிடம் வந்து. அண்ணா... ஏன் நா அப்புடி பார்குற. நான் அண்ணிகிட்ட குழந்தை
இல்லன்னு சண்டை போட காரணம் அண்ணி தான். என்று சொல்ல.

முழுக்குடும்பமும் ரோஹினியை பார்த்தது.

ஆமானா. அண்ணி குழந்தை இல்லன்னு கோயில், கோயிலா போனாக. நேர்ச்சை வச்சாங்ககளே தவிர, டாக்டர் கிட்ட
போகவே இல்ல.  அந்த கோபத்துல தான் நான் அப்படி பேசிட்டேன். அண்ணிகிட்ட நானும் எவ்வளவோ சொல்லிப்
பார்த்துட்டேன் அண்ணா டாக்டர்கிட்ட போகச் சொல்லி. அண்ணி கேட்கவே இல்ல.

கடவுள் நினைக்கிறப்போ கொடுக்கட்டும்னு இருந்தாங்க. அதனால தான் நான் அப்படி சொன்னவாவது போராங்களானு
பார்க்கத்தான் நா..........
என் மனச கல்லாக்கிக்கிட்டு கொண்டு அண்ணி கிட்ட அப்படி பேசினன்.

என்ன மன்னிச்சிடுனா, ஆதி பதில் எதுவும் பேசவில்லை ஆனால் கண்ணால் கண்ணீர் வடிந்தது.

ரோஹினி நீ இதை இப்போ சொல்லி வேலை இல்ல. உன் அண்ணி என்ன விட்டு போக போரா. அவளுக்கு தேவையான
ப்ளட் இன்னும் கிடைக்கலாமா.

அண்ணா. அண்ணிக்கு என்ன ப்ளட் குரூப்.

ஓ போசிடிவ்.

ரோஹினி  எதுவும் பேசாது பாரதி இருந்தஅறைக் கதவை  திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க.

சிவா சிரித்த படி. ரோஹினிக்கும் அதே ப்ளட் குரூப் தான். அவள் ப்ளட் கொடுக்க தான் உள்ள போய் இருப்பாள்.

அப்பொழுது தான் அணைவருக்கும் நிம்மதி பறவியது.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து  congradulations.உங்க வைப் ஆபத்தான கட்டத்த தாண்டிட்டாங்க,

அப்புறம் உங்க வைப் இப்போ மயக்கமா இருக்காங்க. அவங்களுக்கு இப்போ ரெஸ்ட் தேவை. ஒருத்தர், ஒருத்தரா
அவங்கள டிஸ்ட்ரப் பண்ணாம போய் பாருங்க. என்று கூறி முடிக்கும் முன்னே ஆதி உள்ளே சென்றிருந்தார்.

தொடரும்............

என் அவள்Where stories live. Discover now