கனிமொழி நெருப்பை போன்றவள்

632 40 10
                                    


மறுநாள் காலை 10 மணி அளவில் கமல் கனிமொழிக்காக காத்திருக்க.....அவள் வராத காரணத்தால் கமல் தன் அறையில் இருந்து வெளியே சென்றவன் சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் கண்ணம்மாவை சென்று பார்க்க....

கமல் - கனி ஏன் இன்னும் வீட்டுக்கு வரல

கண்ணம்மா - என்ன சொல்ல சொல்றீங்க.... அவ செத்துட்டான்னு சொல்லதான் இப்போதைக்கு எனக்கு ஆசையா இருக்கு

கமல் -🙄

கண்ணம்மா - என்ன அப்படி பார்க்கிற தம்பி...ஏன் அவளை உயிரோடு சாவடிக்கிற..அதுக்கு ஒரே அடியா அவளை சாகடித்துவிடு

கமல் - அதுக்கு உங்க பொண்ணு புண்ணியம் பண்ணல

கண்ணம்மா - போதும் நிறுத்துப்பா...உனக்கு என் மகளை பத்தி என்ன தெரியும்

கமல் - எனக்கு உங்க மகள பத்தி தெரிஞ்ச அளவுக்கு உங்களுக்கு தெரியாது

கண்ணம்மா - ஆமாமா தெரியாது தான்...நான் எத்தனையோ முறை அவளை நீ வரதுக்குள்ள இன்னொருதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருடின்னு சொன்னேன்.... ஆனா அந்த பைத்தியக்காரி தான் கல்யாணமே வேண்டாம் என் வாழ்க்கை முடிந்தது முடித்ததாக இருக்கட்டும்ன்னு உனக்காக காத்துகிட்டு இருக்கா..

கமல் - இது என்ன புது கதையா இருக்கு.. But உங்க பொண்ணு சொன்னா நீங்க அவள வேற எந்த ஆம்பளையையும் பார்க்கவே விடமாட்டீங்க அப்படின்னு

கண்ணம்மா - என்னப்பா உளர்ற..

கமல் - ஆமா நான் தான் கேட்டேனே.. இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள நீ வேற எவனையாவது காதலிக்கிறாயா என்று கேட்டதற்கு எங்க அம்மா யார்கிட்டயும் என்னை பேசவே விடாதுன்னு சொன்னா..

கண்ணம்மா - அவ உன்கிட்ட பொய் சொல்லி இருக்கா.... நீ அசிங்கமா பேசி அவ வாழ்க்கைய சின்னாபின்னமாக்கிட்டு போன பாரு அப்பையிலிருந்து இப்ப வரைக்கும் அவளை இன்னொரு வீட்டுக்கு கட்டிக் கொடுத்து நிம்மதியா அனுப்பனும் என்றது தான் என்னுடைய ஆசை........அதுக்காக என் சொந்த பந்தத்தில் இருக்கிற எல்லா மாப்பிள்ளைங்களையும் இன்ன வரைக்கும் கேட்டுக்கிட்டு இருக்கேன்.....ஆனா இவதான் விடாப்பிடியா எனக்கு கல்யாணமே வேணான்னு உனக்காக காத்துகிட்டு இருக்கா...

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now