மரணிக்கும் வரை நட்பு தொடர வேண்டும்..

360 31 20
                                    


நாட்கள் வேகமாக ஓடியது கமல் மற்றும் கனிமொழியின் நட்பு நாளுக்கு நாள் வாடாத மலராக மலர்ந்தது...அன்றைய தினம் கனிமொழியின் வயது 13.. கமல் கனிமொழியை பார்க்க அவள் வசிக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு வர

கமல் - கனி கனி எங்க இருக்க நீ

கண்ணம்மா - வாங்க சின்னையா

கமல் - aunty கனி எங்க... ஏன் அவ இன்னைக்கு காலையில வீட்டுக்கு வரல

கண்ணம்மா - கனி இன்னையில் இருந்து பதினோரு நாளுக்கு உங்களை பார்க்க வர மாட்டா

கமல் - ஏன் ஏன் என்னாச்சு கனிக்கு.. நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா.. அவ என் மேல கோவமா இருக்காளா

கண்ணம்மா - இல்ல இல்ல பா அவ பெரிய மனுஷியாகிட்டா

கமல் - அவ எப்பவுமே பெரிய மனுஷி போல தானே பேசுவா

கண்ணம்மா - அது அப்படி இல்ல பா

கமல் - நீங்க என்ன சொல்ல வரிங்க எனக்கு ஏதும் புரியல.. நீங்க கனியை கூப்பிடுங்க நான் அவகிட்டையே பேசிக்கிறேன்

கனி - கமல் வா வா

கண்ணம்மா - அடியே நீ ஏன் டி இங்க வந்த.. போ போய் பின்னாடி பக்கம் உக்காரு

கனி - அம்மா நீ என்ன லூசா..எந்த காலத்துல இருக்க நீ.. இப்போ என்ன நான் கொலை குத்தமா பண்ணிட்டேன்..நான் வயசுக்கு வந்து இருக்கேன் அவ்வளவு தானே..அதுக்கு ஏன் நீ இபப்டி பண்ணுற

கமல் - என்ன கனி என்னாச்சு

கனி - ஒண்ணுமில்லைடா நான் age attend பண்ணிட்டேன்..அதுக்கு எங்க அம்மா இந்த அலப்பறை பண்ணுறாங்க

கமல் - அப்படினா

கனி - இப்போ தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போற

கமல் - அப்போ நீ இன்னைக்கு ஸ்கூல் வர மாட்டியா

கனி - யாரு சொன்னது நான் வருவேன்

கண்ணம்மா - வெளிய காலை எடுத்து வச்ச பிச்சிபுடுவேன் உள்ள போடி

கனி - அம்மா எங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம்.. உனக்கே தெரியும் நான் என் லட்சியத்தை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்..இந்த எக்ஸாம் எனக்கு ரொம்ப முக்கியம்

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now