பழி உணர்ச்சி

331 33 11
                                    

கனிமொழியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்ததும் கனிமொழி சுருண்டு வந்து கமலின் காலில் விழ....கமல் துடித்துடித்தவன்...

கமல் - கனி என்னாச்சு.... என்ன கனி...யார் உன்னை அடிச்சாங்க....ஐயையோ என்ன இது ரத்தம்...

என்று கமல் பதற.... கமலின் நடு மண்டையில் தியாகு கட்டையை கொண்டு அடிக்க.... கமல் சுருண்டு கீழே விழ.....

வசந்த் - பாக்க சின்ன பாப்பா போல இருந்துகிட்டு நீ எவ்வளவு தில்லாங்கடி வேலை பாக்குற

கனி - ஐயோ கமல் கமல் ஏங்க கமலை விட்டுடுங்க

வசுந்தரா - அண்ணா இந்த பைத்தியக்காரனை தூக்கி அந்த ரூம்ல போடு 

கனி - ஐயோ வேணா கமலை ஒன்னும் பண்ணாதீங்க

கமல் தலையில் ரத்த காயத்துடன் தரையில் விழுந்து கிடக்க... கனி கமலின் நிலையை கண்டு பதறியவள்

கனி - அம்மா கமலை விட சொல்லுங்க அம்மா

வசுந்தரா - ஏய் யாரு டி நீ.... இங்க என்ன நடக்குது.... நீ ஏன் டி இவன் கூட இந்த பங்களால  இருக்க

கனி - அம்மா நான் கண்ணையா மகள் தானே... அதான் கமல் மேல எனக்கு நட்பின் அடிப்படையில்

என்று கனிமொழி சொல்லி முடிக்கும் முன் தியாகு கனியின் கன்னத்தில் ஒரு அறை விட்டவன்

தியாகு - என்னடி கதை சொல்றியா.. இப்போ தான் உன் ஆத்தாகிட்ட உங்களின் மலரும் நினைவுகளை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு வந்தோம்

கனிமொழி - என்ன.. என்ன சொல்றிங்க

வசந்த் - ஆங் இத்தனை வருஷம் நீ போட்ட நாடகம் எல்லாம் அம்பலம் ஆகிருச்சு டி

கனிமொழி - இல்ல இல்ல நீங்க எதோ தப்பா நினைக்கிறீங்க

வசுந்தரா - ஏய் போதும் நிறுத்து ..டேய் தியாகு இந்த பைத்தியக்காரனையும் இந்த வேலைக்காரியையும் அந்த ரூம்ல தூக்கி போடு...அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்துல ரெஜிஸ்டரர் இந்த பங்களாக்கு வந்தாகணும்

தியாகு - என்ன அத்தை சொல்றிங்க

வசுந்தரா - இங்க பாரு நாளைக்கே இந்த பைத்தியக்காரனுக்கும் நம்ம டாப்சிக்கும் கல்யாணம்... அதன் பிறகு இவன் அந்த ரூமலையே இருக்கட்டும்... நம்ம டாப்சிக்கும் அவ காதலிக்கிற பையனுக்கும் நம்ம யாருக்கும் தெரியாம வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்...அப்புறமா டாப்ஸி pregnant ஆனபிறகு அந்த பிள்ளை கமலோடாது தான்னு நம்ம இந்த சொத்தை எல்லாம் குழந்தை பேர்ல மாத்திடலாம்

🔞LOVE vs SEX🔞Tempat cerita menjadi hidup. Temukan sekarang