எமன்

359 34 21
                                    

விஸ்வநாதன் - ஐயோ அம்மாடி கனி என்னடா என்ன ஆச்சு.... ஐயோ ஏன் கமல் கை எல்லாம் ரத்தம்

கனி - தாத்தா இருங்க இருங்க பதட்டப்படாதீங்க

என்று சொன்ன கனி முதலுதவி பெட்டியை எடுத்து வந்து கமலுக்கு மருத்துவம் செய்ய..அதேசமயம் கனிமொழியின் அப்பா கண்ணையாவும் அந்த இடத்திற்கு வர

கண்ணயா - என்னம்மா என்ன ஆச்சு.. ஐயோ சின்னையா கைல ரத்தம்

கனி - அப்பா இருங்கப்பா பதட்டப்படாதீங்க

என்று கனி சொல்ல......கனிமொழியின் தந்தை கண்ணய்யா வின் உதவியோடு கமலை கட்டிலில் படுக்க வைக்க..சில நிமிடம் கடந்த நிலையில் கமல் கண் திறந்தவன்..கனிமொழியைப் பார்த்து மீண்டும் பதற்றத்துடன் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டவன்

கமல் - என் குழந்த...என் குழந்தையை கலைச்சுடாத கனி....உன்னை கெஞ்சி கேட்கிறேன்

என்று மீண்டும் கமல் உணர்ச்சிவசப்பட...கோபம் கொண்ட கனிமொழி கமலின் கன்னத்தில் ஒரு அறை விட்டவள்

கனி - என்ன காரியம் பண்ற.. உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் என் நிலைமையை யோசித்துப் பார்த்தியா.. இப்படி உசுரை விட பாக்குறியே.. அப்போ  உனக்கு நாங்க எல்லாம் முக்கியம் இல்லையா...

கமல் - இல்ல எனக்கு எல்லாரவிட என் குழந்தை ரொம்ப முக்கியம்...நீ என் குழந்தையை ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லு..இல்லையா எங்க அந்த கண்ணாடி துண்டு... நான் அந்த கண்ணாடி துண்டால என் கழுத்தை அறுத்துக்கிட்டு உன் கண்ணெதிரிலேயே செத்துடுவேன்

என்று கமல் மீண்டும் சொன்னதையே சொல்ல... கண்கள் கலங்கிய கனிமொழி

கனி - இல்ல கமல் நான் உன் குழந்தையை ஒன்னும் பண்ண மாட்டேன் போதுமா

கமல் - உண்மையா தானே சொல்ற

கனி - ம் ஆமா உண்மையா தான் சொல்றேன்

கமல் - என் மேல சத்தியமாதான சொல்ற

கனி - ம் உன்மேல சத்தியமா சொல்றேன்

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now