வாழக்கையே நாடகம்

420 25 20
                                    


அன்றைய தினம் மீண்டும் இவர்கள் சண்டையுடன் சேர்ந்த சமாதான நிலைக்கு வர... சில நிமிடங்கள் கடந்த நிலையில் கமல் அவன் கட்டிலில் படுத்திருக்க...அவன் தேகத்தில் இவள் ஒட்டி இருந்தவள் கண் விழித்ததும் அசந்து உறங்கிக் கொண்டு இருந்த கமலின் நெற்றியில் தன் இதழ் பதித்த தருணம் கமல் சற்றென்று கண் விழித்தவன்...

கமல் - என்னடி என்ன கொலை பண்ண பார்க்கிறியா...

கனி - என்னால அது முடியாதுன்னு நினைக்கிறியா..

கமல் - என் உயிர் உன் கையால தான் போகும் என்று விதி இருந்தால் அதை யாரால மாத்த முடியும்

கனிமொழி - உன் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியிற ஒரு நொடிக்கு முன்னாடி என் உயிர் பிரிந்து விடும்

கமல் - ம் நல்லா பேசுற... சரி இப்போ நீ ஏன் என் பக்கத்துல படுத்து இருக்க

கனிமொழி - ஓ உன் காரியமெல்லாம் முடிஞ்சதும் ஒன்னும் தெரியாதவன் போல நான் ஏன் உன் பக்கத்துல படுத்து இருக்கன்னு கேக்குறியா

கமல் - என்ன காரியம் முடிஞ்சது

கனி - ஓ இப்ப சார் என்ன பண்ணிங்கன்னு நினைவு இல்ல அப்படித்தானே

கமல் - ஆமா எனக்கு நினைவு இல்ல

கனி - ரொம்ப நல்லது அப்படியே எல்லாத்தையும் மறந்திடு முதல்ல என் டிரஸ் எடுத்து குடு

கமல் - என்னது டிரஸ் இல்லாமையா என் பக்கத்துல படுத்து இருக்க...சொல்லவே இல்ல

கனி - சொல்றாங்க சரிதான் போடா

கனிமொழி செல்லமாக கமலை கடிந்து கொண்டே எழுந்தவள் குளியல் அறைக்குச் சென்ற சில நிமிடங்களில் வேறு ஆடைகளை மாற்றிக் கொண்டவள் அந்த அறையில் இருந்து சமையலறையை நோக்கிச் செல்ல......கமல் தனக்குள் அவளை ரசித்துக்கொண்டே அவளுடன் மீண்டும் கலந்ததை நினைத்து மகிழ்ந்தவன் அந்த அறையில் இருந்து வெளியே சென்றவன் ஒரு ஒரு அறையாக தன் மலரும் நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டே சென்றவன்.......கடைசியாக ஒரு  அறைக்குள் நுழைந்தவன் கண்கள் கலங்கிய நிலையில் தன் தாத்தா விஸ்வநாதன் மற்றும் கனிமொழியின் அப்பா கண்ணையா ஆகிய இருவரின் புகைப்படத்திற்கு முன்பு மண்டியிட்டு அழத் தொடங்கியவனின் சிந்தையில் சில வருடத்திற்கு முன்பு நடந்த கதை மீண்டும் இன்று உதிக்க...

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now