உயிர்

399 36 78
                                    

கமல் - என்ன கனி நான் என்ன பண்ணனும்

கனி - நீ ஆசை படுறது போல நான் நம்ம பிள்ளையை உனக்கு பெத்து தரேன்.. ஆனா நீ எனக்கும் சேர்த்து அமெரிக்கா போய் நம்ம ரெடி பண்ண ப்ராஜெக்ட்ட முடிக்கனும்..

கமல் - அது எப்படி கனி உன் வயத்துல என் பிள்ளை வளரும் போது நான் எப்படி கனி உன்னையும் நம்ம பிள்ளையையும் விட்டு தனியா அங்க போவேன்..

கனி - பாத்தியா பாத்தியா..என்னோட ஆசை என்னோட லட்சியம்.. என் கனவுனு.. நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நீ ஆசை பட்ட ஒரே காரணத்துக்காக உன் பிள்ளையை நான் பெற்று தர சம்மதிக்கிறேன்.. ஆனா நீ என்னடானா எனக்காக ஒரு ஆறு மாதம் வெளியூர் போய் என் ஆசையை நிறைவேற்ற மாட்டியா..

கமல் - இல்ல கனி உன் வயத்துல நம்ம பிள்ளை வளரும் போது நான் உன் பக்கம் இருந்து உனக்காக எல்லாம் பண்ணனும்னு எனக்கு ஆசை இருக்காதா..

கனி - நீ ஆறு மாசத்துல வந்துடுவா தானே..அப்புறமா நீ என்ன வேணா பண்ணு..

கமல் - இல்ல கனி..

கனி - ஏன் கமல் இந்த ஒரு சின்ன விஷயம் கூட நீ என் தரப்பில் இருந்து யோசிக்க மட்ட இல்ல... அப்புறம் எங்க இருந்து கமல் காதல் அது இதுன்னு பேசுற.

கமல் - கனி கனி என்ன நீ அப்போ உன் மேல எனக்கு காதல் இல்லைனு சொல்றியா..

கனி - நான் சொல்லல கமல்.. நீ நடந்துக்குறது எனக்கு அப்படி தான் தோணுது..

கமல் - நான் உன்னை நேசிக்கிறேன் கனி...ஆனா எல்லாத்தையும் விட என் குழந்தை நம்ம குழந்தை

கனி - யாரு இல்லன்னு சொன்னா..ஆனா எனக்காகவும் நீ இருக்கணும் இல்ல

கமல் - சரி இப்போ நான் என்ன பண்ணனும்

கனி - நீ இன்னும் ஒரு மாசத்துல அமெரிக்கா கிளமபனும்

கமல் - ம் சரி

கனி - நீ போயிட்டு வெற்றியோட தான் திரும்பணும்

கமல் - சரி உனக்கு அது தான் சந்தோஷம்னா நான் கண்டிப்பா பண்றேன்..

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now