17. தென்றலவள்

92 16 21
                                    

தேகம் தீண்டும் தென்றல்
காற்றே உன் உறைவிடம்
எங்கேயோ?

குறிஞ்சி நிலமாய்
குழைந்து பேசும்
குமரியவள்
மேகம் உரசி காதல் பேசும்
பச்சை தேவதையவள்
கையை நீட்டி
கன்னம் கிள்ளும்
மரகத பாவையவள்
தேயிலை காட்டை
தேகமாய் கொண்ட
தெரிவையவள்
பருவங்கள் மாறி
பூத்துக் குலுங்கும்
பூவையவள்
மலையாய் நின்று
மழை மேகம் தீண்டி
மாரி பெய்யும்
மடந்தையவள்
வஞ்சமில்லா நெஞ்சம்
கொண்ட மனிதம் பேசும்
வஞ்சியவள்
அன்பை மட்டும் அளவில்லாது
அள்ளி வழங்கும்
அணங்கு அவள்
காலம் மாறினும்
மாறாது காவியம் பேசும்
காரிகையவள்
மாறிடும் மனங்களில்
மாற்றம் காண மனிதம் பேசும்
மலையகம் தான்
மங்கையவள்
அவள் பூத்திருக்கும் பூமியில்
பாவை பேசும் மொழியாய்
உறைந்தவள் தான்
காற்றாய் நானும் வீசுகிறேன்
தேகம் தீண்டும்
தென்றலாய்....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now