75. தொலை தூர காதல்

129 10 62
                                    

💞 இனிதாய் ஒரு ரயில் பயண‌ம்
இல்லையே நீயும் ரசிக்க
அருகில் இக்கணம்..

தட தடக்கிறது தண்டவாளம்
துடி துடிக்கிறது என் மன ஆழம்..

ஆழத்தில் அழுத்திய அவள்
அசைகிறாள் மெல்ல
தொட்டு செல்லும் காற்றில்
தொலையாத தீண்டலாய்
தொடரும் பயணத்தில்
தொடர்ந்து வருகிறாள்
அவளும் ஓர் தொடர்கதையாய்..

கதை‌ கதையாய்
நினைத்த தருணம்
நிமிடங்கள் கடத்தி
பேசாது போனாலும்
அழைக்கும் தருணம் எண்ணி
அழைப்புக்கு காத்திருக்கும்
நொடியெல்லாம் ஆயிரம்
கதைகள் கூறிட எண்ணினாலும்
அழைத்த கணம்
" உன் இன்மையை
உணர்கிறேன் நான் " என்ற
வார்த்தையை மட்டுமே
உணர்வாய் பரிமாறி
அடுத்த அழைப்பிற்கு
காத்திருக்கும் நிமிடங்களில்
நிலைத்திடும் நம்பிக்கைதான்
தொடர்கிறது
தொலையாத காதலாய்..

பல நேரம் உறவுகளோடு
கலந்திருந்து
சில நேரம் நட்புக்களோடு
நகைத்திருந்து
பலர் இருந்தும் உனை மட்டும்
தேடும் மனது நீ இல்லா
உணர்வை தரும் நேரம்
தனிமையில் தனித்திருந்து
தவிக்கிறது
தனியாத காதலாய்..

இயல்பான காதலரை போல்
இல்லாது போனாலும்
உனை நினைத்து
மகிழும் போது நினைவுகளாயும்
அழுது சாயும் போது
அழைப்புகளாயும்
தன் இருப்பை உணர்த்தி
" தொலை தூர காதலா?
அது தடம் இல்லாது
தொலைந்து தான் போகும் " என்ற
நம்பிக்கையற்ற
வார்த்தைகளையும் தாண்டி
ஒரு நாள் நனவாகும் என்ற
எதிர்பார்ப்போடு காத்திருந்து
நீ தொட்டு சென்ற கதையை
முற்று வைத்து முடிக்கலாம் என்று
தொடர்ந்து வருகிறேன்
தொடரூந்து பயணமாய் உனைத்தேடி
நீயும் காத்திருப்பாய் என்ற
நம்பிக்கையில்..

தொலைந்து தொலையாமல்
தொடர்ந்து கொண்டேயிருப்பேன்
உன்னுடனான என்
தொலை தூர காதல்
தோற்று விடாது என்ற
தொலையாத நம்பிக்கையில்
என்றென்றும்....😉

தொடர்கிறேன் நான்,,
நிலா ரசிகன்


(உன் இன்மையை உணர்கிறேன் நான் - I Miss You)

(Long distance love ah pathi oru poem try pnne..andha maari feel aaguthaanu read pnravaga negatha sllanum..🥰 etho ennala mdinjathu sagos 😊)

🥰 etho ennala mdinjathu sagos 😊)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

(Sago ungalukaha 🥰 k ah 👍🏻)

காகித கிறுக்கல் Where stories live. Discover now