4 - மஸ்லமாஹ் அல் அம்ரீ

95 19 35
                                    

"மஸ்லமாஹ்!" தாயின் குரல் கேட்டதும் தலையையுயர்த்திக் கண்களைக் கடிகாரத்தில் பதித்து விலக்கியவன், தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நோட்டையும் பேனையையும் அப்படியே மேசையில் வைத்து விட்டு எழுந்து சென்றான்.

"ஏன் அழைத்தீர்கள்?" என்று தாயின் நெற்றியில் இதமாக முத்தமிட்டவன் கேட்க,

"வேலையெல்லாம் முடிந்து விட்டதா மகன்? நான் கொஞ்சம் கடைக்குப் போக வேண்டும் துணி வாங்குவதற்கு..." என்ற தாயைப் பார்த்து,

"இப்போதே போகலாமே? நீங்கள் தயாராகிக் கொண்டு வாருங்கள்" என்றான் புன்னகையுடன்.

இப்படியொரு மகன் கிடைக்க ரிழா என்ன நன்மை செய்திருப்பாளோ? பொறுப்பானவன்; அன்பானவன்; மதிப்பளிப்பவன்.

"இதோ வருகிறேன் மகன். அது வரை உனது தங்கையை எழுப்பி அவளையும் தயாராகச் சொல்லு" என்று விட்டு உள்ளே சென்றார்.

தங்கையின் அறை வாசலருகே சென்றவன் கதவைத் தட்ட, உள்ளேயிருந்து ஒரு பதிலும் வரவில்லை. "ஸைனப்! ஸைனப்!" என்று அழைத்துப் பார்த்தும் பதிலில்லை.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். நல்ல தூக்கம் அவள். கறுங்கூந்தல் நெற்றியில் விழுந்து காற்றுக்கு அசைந்தாடிக் கொண்டிருந்தது.

பூரண நிலவே தரையிறங்கி வந்து அந்தத் தலையணையில் விழுந்திருப்பது போன்றிருந்தது அவள் விம்பம். வீட்டில் மற்ற அனைவருக்கும் கறுத்த தோல். அவள் மட்டுமே மா நிறம்.

"ஸைனப்!" அவளது தோள்ப்பட்டையைப் பிடித்து உலுக்கினான் மஸ்லமாஹ்.

"உஹ்.." சினுங்கியவாறே திரும்பிப் படுக்கப் போனவளை இழுத்து அமர வைத்து,

"ஸைனப், உம்மி கடைக்குப் போக வேண்டுமாம். உன்னையும் வரச் சொன்னா" என்றான்.

எங்கிருந்து தான் அவ்வளவு உற்சாகம் வந்ததோ, போர்வையை உதறித் தள்ளி விட்டு எழுந்தமர்ந்தவள், கூந்தலை அள்ளி ஒரு கொண்டையாகப் போட்டுக் கொண்டு, தமையனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு வேகமாகச் சென்றாள் தயாராகி வருவதற்காக.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now