17 - ஈதுல் ஃபித்ர்

65 18 31
                                    

Eid Mubarak everyone!
***
Am back with an update!
Enjoy!

ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடுவதற்காக முழு அரேபியாவும் தயாராகிக் கொண்டிருந்த உற்சாகம் பொங்கும் சந்தர்ப்பமது!

விடுதியில் பெண்களனைவரும் குளித்துப் புத்தாடையுடுத்தி ஈத் தொழுகைக்காகத் தயாராகியிருந்தனர். வழமை போல அனைவருக்கும் ஒரே மாதிரி ஆடை தைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

பெருநாளைக்கு சில வாரங்களுக்கு முன்பே ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் பெண்கள் வந்து அனைவரினதும் உடை அளவுகளை அளந்து குறித்துக் கொண்டு போவார்கள்.

பெருநாளைக்கு இரண்டு நாளைக்கு முன்பு அழகான புத்தாடை சுடச்சுட அவர்களது கைகளுக்கு வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு வருடமும் அங்கு பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலை வைத்துள்ள ஷேஃக் சமர் தான் இந்த உதவியைச் செய்து வருகிறார்.

ஒரே போல அனைவரும் உடுத்திக் கொண்டு சகோதரிகளாய் விடுதியை வலம் வரும் காட்சியைக் காண ஆயிரம் கண்களாவது வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் மாறி மாறி ஹிஜாப் அணிவித்து விடுவதும் அலங்கரித்து விடுவதுமென்று களை கட்டியிருக்கும் அவ்விடம்.

விடுதியிலுள்ள பெரிய பிரதான மண்டபத்தை முதல் நாள் இரவே அலங்கரித்து வைத்து விடுவர். காலையில் அனைவரும் அங்கு வந்து நின்று நினைவுச் சின்னமாக ஒரு புகைப்படம் பிடித்துக் கொள்வர்.

மஸ்ஜிதுகளிலுள்ள ஒலிபெருக்கிகளில் தக்பீர் ஓசை வானைப் பிளக்க, ஈத் தொழுகையை முடித்து விட்டு ஆண்களும் பெண்களும் களைந்து சென்று கொண்டிருந்தனர்.

விடுதியில் தொழுகையை முடித்து விட்டு பெண்கள் அனைவரும் அமர்ந்து கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்து விட்டு, காலையுணவை உட்கொண்டதும் அனைவரும் சற்று ஓய்வெடுப்பதற்காகத் தத்தம் அறைகளுக்குச் சென்று விட்டனர்.

யன்னல்த் திரைச் சீலையை விலக்கி வீதியைப் பார்த்தாள் ஸைனப். தூய்மையான வெள்ளைத் தோப்பும், வெள்ளைக் கபிய்யாவும் அணிந்து, அத்தர் மணம் கமழ வீதியெங்கும் இளைஞர்கள் ஈதின் வாசனையை நுகர்ந்தவாறே போய்க் கொண்டிருந்தனர்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now