14- ரிழா

68 20 8
                                    

விடிந்ததும் ரிழா வந்து விட்டாள் ஸைனபை அழைத்துச் செல்ல. ஒரு இனம்புரியாத ஆவலுடன் வெளியே வந்தவள், ரிழா தனது மகனின் காரில் வந்திருக்க, சற்றுத் தயங்கி நின்றாள்.

"வா ஸைனப்"என்று அவளது கையைப் பற்றி அழைத்து காரில் அமர வைத்தார்.

அவளது பார்வை தானாக ஓட்டுனரின் இருக்கைக்குத் தாவியது. அங்கே அவன்!

அவனும் அவளைக் கண்டிருக்க வேண்டும். அவனையே போல அவள் இருப்பதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும்.

மனதை அமைதிப்படுத்தும் நோக்கோடு கண்ணாடிக்கு வெளியே நோக்கினாள். காற்றின் வீரியத்துக்கு ஈடு கொடுத்து பாலைவன மணல் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது.

ஐந்து நிமிடங்களில் அவர்களது வீடு வந்து விட்டது போலும். இறங்கினார்கள். அவளது கண்கள் அவ்வீட்டையும் அதன் சூழலையும் அளவெடுத்தன.

ஒரு சாதாரண வீடு. பெரியதுமல்ல, சிறியதுமல்ல. முற்றம் சுத்தமாகப் பெருக்கப்பட்டிருந்தது. ஈச்சம்பழ மரங்கள் மூன்று வேலி ஓரத்தில் ஒய்யாரமாக நின்று புன்னகைத்தன. ஆடுகளிரண்டு தூரத்தில் இல்லாத புல்லை மேய்ந்து கொண்டிருந்தன.

"உள்ளே வா" என்ற ரிழாவின் குரலில் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவர் பின்னால் சென்றாள்.

மஸ்லமாஹ் அங்கிருப்பது சங்கடமாக இருந்தது. அதையுணர்ந்தவன் போல, "உம்மி, நான் போய் வருகிறேன். கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று விட்டுக் காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

உள்ளே ஸைனபை அழைத்துச் சென்றவர், அவளை அன்புடன் அமர வைத்து உபசரித்தார். நோன்பு காலமாதலால் சாப்பிட எதுவும் கொடுக்கக் கிடைக்கவில்லை.

"உண்மையில் நான் உங்களுக்கு யார்?" அமைதியைக் குலைத்தவளாய்க் கதையைத் தொடங்கி விட,

"நீ என் மருமகள்" என்றார் அவர். ஸைனப் கண்கள் விரிய ஆச்சர்யமாக அவரைப் பார்த்தாள்.

"எனக்கு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லுங்கள்" பொறுமையின்றி அவள் கேட்டதும் ஒரு சோகப் புன்னகையின் பிரவேசத்துடன்,

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now