26 - ஸைனபுக்குத் திருமணம்

57 17 16
                                    

ஷேஃக் ரய்யான் அல் நழ்ரின் கல்லூரியில் பணி புரிவதற்கு இருவரைத் தெரிவு செய்து அனுப்பியாகி விட்டது. ஹம்தாவும் அப்ராவும் தினமும் கற்பித்தல் வேலைகளில் சிறப்பாக ஈடுபடலாயினர்.

அல்அம்ரீ வீட்டுக்கு வந்தாலே அவர்களது வகுப்புக்குக் கற்பிக்கும் ஆசிரியை ஹம்தாவைப் பற்றி அல்பஷரியிடம் புகழ்ந்து கொட்டுவது தான் அவளுக்கு வேலை. மூத்தவளும் புன்னகையுடன் கேட்டுக் கொள்வாள்.

இஸ்லாமிய ஷரீஆவைக் கற்பதில் அல்அம்ரீ காட்டும் ஆர்வத்தின் உச்ச கட்டத்தை, தூக்கத்தில் அவள் ஹதீஸ்களையும் இமாம்களின் கூற்றுக்களையும் முணுமுணுப்பதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

மஸ்லமாஹ் இப்போதெல்லாம் வீட்டில் இருப்பதேயில்லை. அல்பஷரீ அவனை சில நாட்களாகக் காணவேயில்லை என்றே சொல்லலாம். அவளிருக்கும் நேரம் அவனில்லை.

எப்படியோ அவர்களது திருமணத்துக்குக் குறிக்கப்பட்ட நாள் மட்டும் நெருங்கிக் கொண்டிருந்தது. ரிழா தான் மகிழ்ச்சியுடன் வேலைகளை இழுத்துப் போட்டு இயங்கிக் கொண்டிருந்தார்.

அல்பஷரீயோ மஸ்லமாஹ்வோ ஒன்றும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வேறு யாருக்கோ திருமணம் போலத் தான் இருவரும் நடந்து கொண்டிருந்தனர். அல்அம்ரீக்கு அதைப் பார்க்கையிலே எரிச்சலாக இருந்தது.

ஒரு நாள் மஸ்லமாஹ் வீட்டுக்குள் நுழையும் போது எதிர்பாராதவிதமாக அர்பஷரீயும் அங்கு வந்து அவனைக் காண நேரிட்டது. ஒருவரையொருவர் கண்டு கொள்ளாது கடந்து செல்ல முனைந்த போது தொண்டையைச் செறுமிய அல்அம்ரீ,

"இங்கே வாருங்கள் இரண்டு பேரும். எங்கள் வீட்டில் திருமணமொன்றுக்கு ஏற்பாடு நடக்கிறது. யாருக்குத் திருமணமென்று எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்றாள் இடுப்பில் கைகளை வைத்து முறைத்தவாறே.

இருவரும் இஞ்சி தின்ற 'குரங்குகள்' போல திரு திருவென விழிக்க, அவளே மேலும் தொடர்ந்தாள்.

"சமூக சேவை முக்கியம் தான். இல்லை, கட்டாயம் தான். ஆனால், சொந்த வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விட்டு சேவை புரிய வேண்டுமா? கொஞ்சம் உங்கள் வாழ்க்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என்றாள் கராராக.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now