6 - ரமழான்

82 20 11
                                    

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டு விட்டது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை குதூகலம் எனும் குடையைப் பிடித்துக் கொண்டனர்.

பிரதான மஸ்ஜிதின் நுழைவாயில் ஆண்களாலும் சிறுவர்களாலும் நிரம்பி வழிந்தது. பின்பக்க வாயில் வழியே பெண்கள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

ஸைனபும் ஹம்தாவும் ஹாலாவும் கூட வந்திருந்தனர். அவர்கள் தங்கள் விடுதியிலேயே தராவீஹ் தொழுகை நடாத்தலாமெனத் தீர்மானித்திருந்தனர்.

ஆனால் முதன்முறையாகச் செய்யப் போவதால், ஒரு முறை மஸ்ஜிதுக்கு வந்து இங்கு எவ்வாறு தொழுகை நடாத்தப்படுகிறதென்று பார்த்து விட்டுச் செல்லலாமென்பதே அவர்களது எண்ணம்.

மற்றவர்கள் தனித்தனியாக விடுதியிலேயே தொழுது கொள்வதாகக் கூறியிருந்தனர். ஸைனபும் ஹம்தாவும் இரண்டாம் வரிசையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு கண்ணாடித் திரை போடப்பட்டிருந்தது. அதன் மீது திரைச்சீலைக்ள் தொங்கவிடப்பட்டிருந்தும் அவை விலக்கி வைக்கப்பட்டிருந்தன.

அது கறுப்புக் கண்ணாடி. ஆண்களுக்கு பெண்கள் பக்கம் பார்க்க முடியாது. ஆனால் பெண்களுக்கு ஆண்கள் பக்கம் பார்க்க முடியும். அதை ஏன் அப்படி அமைத்துள்ளார்கள் என்று சிந்திக்கும் முன்பு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.

திரைச்சீலைகள் விலக்கப்பட்டவாறே இருந்தன. அதை இறக்கிக் கீழே தொங்க விட்டு விட ஸைனபின் கைகள் துடித்தன. அதற்கு முன்னர் இமாம் தக்பீர் கட்டி விட்டார்.

அழகான குரல். நீட்டி நிறுத்தி அமைதியாக ஓதினார். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல். ருகூஉ, ஸுஜூது என்று குனிந்து பின்னர் எழுந்து ஆறு ரக்அத்துக்கள் முடிந்து விட்டன.

ஏழாவது ரக்அத்தும் ஆரம்பிக்கப்பட்டது. அதே போலத் தான் ஓதினார். ஆனால் துரதிஷ்டவசமாக ஓதுவது இடையில் தடைப்பட்டு நின்றது. என்ன ஏதென்று அனைவரும் யோசிக்க, இமாமுக்கு அடுத்து வரும் பகுதி மறந்து விட்டது என்பது தெரிந்து போனது.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now