16 - ஹம்தாவுக்கு வரன்

75 19 6
                                    

ஸைனப் சென்று ரிழாவுடன் கதைத்து விட்டு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவர் தராவீஹ் தொழுகைக்கு வரும் போது பார்த்துக் கதைத்துக் கொள்வாள்.

ஸைனப் அல் அம்ரீ அவளையொரு சொந்த சகோதரியாகவே நினைத்து அன்பைக் கொட்டத் தொடங்கியிருந்தாள்.

இனிய மனம் படைத்த இவ்விருவரும் தனது குடும்பமென்று நினைக்கையிலே ஸைனபுக்கு ஆனந்தமாக இருந்தது.

கமரிய்யாப் பெண்கள் தீர்மானித்ததற்கு அமைய ரமழானின் இறுதிப் பத்தில் கியாமுல் லைல் தொழுகை வெற்றிகரமாக நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

அதிகாலை ஒன்றரை மணிக்குத் தொழுகை ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னர் அனைத்துப் பெண்களும் சற்று நேரம் தூங்கியெழுந்த பின்னர் அங்கு வந்து சேர்ந்து விடுவர்.

ரிழாவும் ஸைனபும் வந்ததையிட்டு இவளுக்கு மகிழ்ச்சி. பல வருடங்களுக்கு முன்னர் அறுந்த கயிறு மீண்டும் புதுப்பிக்ப்பட்டு உறுதி பெறுவதையிட்டு ரிழாவுக்கும் மகிழ்ச்சி.

எப்படியாவது அவளை விடுதியிலிருந்து தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

அன்று அவளிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். "ஸைனப், வீட்டுக்கு வருவது பற்றி என்ன யோசித்திருக்கிறாய்?"

"ம்ம்.... நான் விடுதியிலேயே தங்கிக் கொள்கிறேன். இங்குள்ள என் சகோதரிகளை விட்டு வருவது...." என்று அவள் தயங்க,

"ஸைனப், நீ இத்தனை வருடங்கள் அவர்களுடன் தானே இருந்தாய்? இன்னும் கொஞ்சம் காலத்தில் நீ திருமணம் முடித்துப் போய் விடுவாய். அதன் பிறகு உன்னை எங்கு காண்பது? அதுவரையிலாவது வீட்டில் வந்து தங்கியிரு. நீ எனது மகள் போல... புரிகிறதா? உன்னை விடுதியில் விட என் மனம் சம்மதிக்குமா?" என்றார் ரிழா.

இவ்வளவு காலம் அவளை அறிந்து கொள்ளாமல் விடுதியில் விட்டு வைத்தோமே என்ற குற்றவுணர்ச்சி வேறு அவரை வாட்டியது.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now