11 - ஸைனபின் ஹாபிழ் எங்கே?!

79 18 26
                                    

கதவின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு, நிலத்தை நோக்கியவாறு, இன்னொரு கையால் தனது கபிய்யாவைச் சரி செய்து கொண்டு தலையை உயர்த்தினான்.

"ஸைனப் அல் பஷரீ" அந்த இளைஞன் சொன்னது தான் தாமதமென விடுதியின் தலைவி ரயீஸாவின் முகத்தில் பெரியதொரு புன்னகை அரும்பியது.

"சந்தோஷம். நான் கதைத்துப் பார்த்து விட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்" என்று அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்.

அன்று பதினைந்தாவது நோன்பு. அதிகாலையிலேயே அலுவலகத்துக்கு வநதிருந்த அந்த இளைஞன் விடுதியின் பொருப்பாளரைச் சந்திக்க வேண்டுமெனக் காத்திருந்தான்.

ரயீஸா வந்து விடயம் என்னவென்று வினவ, தான் இந்த விடுதியில் வசிக்கும் பெண்ணொருத்தியைக் கரம்பிடிக்க விரும்புவதாகக் கூறினான்.

அது ஸைனப் அல் பஷரி என்று தெரிந்ததும் ரயீஸாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வசந்தம் அதுவாகவே வீடு தேடி வந்தால் யார் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்?

அந்த இளைஞனைப் பார்க்கும் போதே அவனொரு நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பத்திலிருந்து வந்தவனென்பது விளங்கியது. நேரத்தியாக உடையணிந்து அளவான தாடி வளர்த்துப் பார்ப்பதற்கு ஆணழகனாகத் தெரிந்தான்.

அவனை மனதுக்குள் ஸைனபின் பக்கத்தில் நிறுத்திப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டார். அத்தனை பெண்களுக்கும் விடுதி நடாத்துவதல்ல, அவர்களனைவரையும் சரியான வயதில் சரியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு ரயீஸாவுக்கு இருக்கவே இருக்கிறது.

கிழமைக்கு ஒருவர் வீதம் இவ்வாறு யாராவது ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகக் கேட்டு வருவது வழக்கம். இன்று ஸைனப் அல் பஷரீ!

இந்த விடயத்தில் ஸைனப் மகிழ்ச்சியடைவாள் என்ற நோக்கோடு மாலையில் அவளைத் தேடிச் சென்றார் ரயீஸா. தொழும் மண்டபத்தில் பாயில் அமர்ந்து ஒரு ஹதீஸ் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now