24 - மஹர்

46 18 23
                                    

விடிந்தது அதிகாலை...

"ஸபாஹுல் ஹைர்!" என்று இளித்தாள் அல்அம்ரீ.

"ஸபாஹுன் நூர்!" என்று அதே இளிப்பைப் பிரதிபலித்து விட்டுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அல்பஷரீ.

நேற்றிரவு மஸ்லமாஹ்விடம் ரிழா என்ன சொன்னாரென்பது அவளுக்குத் தெரியவில்லை. வுழூ செய்து கொண்டு வந்தவள் அல்அம்ரீ தொழுது கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் தனது விரிப்பையும் விரித்து தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றினாள்.

வழமையான துஆக்களுடன் சேர்த்து அன்று புதிதாக மஸ்லமாஹ்வையும் துஆவில் இணைத்துக் கொண்டாள். அவனது நலம் வேண்டிப் பிரார்த்தித்தாள். அவர்களது திருமண வாழ்வில் பரக்கத் புரியும்படி இறைஞ்சினாள்.

பஜ்ருக்கு இன்னும் அரை மணித்தயாலம் எஞ்சியிருந்தது. அடுத்த அறையில் ரிழா எழும்பும் ஓசை கேட்டது. மஸ்லமாஹ் வழமை போல மஸ்ஜிதுக்குச் சென்றிருப்பான் போலும்.

"சகோதரி! ஒரு வேளை செய்யலாம்" என்றாள் அல்அம்ரீ. என்னவென்று இவள் புருவத்தயைுயர்த்த,

"நாமிருவரும் சேர்ந்து ஒரு சூராவை ஓதலாமா?" என்றாள். ஆமென்று ஆர்வத்துடன் ஒப்பியதும்,

"என்ன சூரா?" என்றாள் அல்பஷரீ.

"கியாமாஹ்?" என்றதும் தலையசைத்தவள் சுவரில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ {١}
மறுமை நாள் மீது நான் சத்தியம் செய்கிறேன் (1)

அல்பஷரீ ஆரம்பித்தாள். அவளைத் தொடர்ந்து அடுத்த வசனத்தை அல்அம்ரீ ஓதலானாள். இருவரது குரல்களும் கலந்து ஓர் இனிய இராகம் உருவானது.

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ {٢}
மேலும், (குற்றம் செய்வதை) நிந்தித்துக் கொள்ளும் ஆன்மாவின் மீதும் சத்தியம் செய்கிறேன். (2)

أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ {٣}
நாம் மனிதனது எலும்புகளை ஒன்று சேர்க்க மாட்டோமென்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானா? (3)

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now