8 - என்ன உறவு?

80 19 12
                                    

"அந்த மீன் இறைத் தூதர் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வயிற்றில் சுமந்து கொண்டு கடல் முழுவதும் திரிந்தது. கடலினடியிலுள்ள அல்லாஹ்வின் படைப்பினங்களையெல்லாம் இறைத்தூதர் அவர்கள் பார்த்து வியந்தார்கள்" என்று பத்து வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகளையெல்லாம் வட்டமாக அமர வைத்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்த அப்ரா, திடீரென ஒலித்த தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

ஸைனப் தான் அழைத்திருந்தாள். சிறுவர்களுக்கான சீறா வகுப்பை இன்னும் அரை மணித்தயாலத்தில் முடித்து விட்டு இஃப்தாருக்குத் தயாராக வேண்டுமெனக் கூறினாள்.

ஓரளவு பெரிய மூன்று அறைகளைக் கொண்ட ஒரு கட்டடம். இரண்டு அறைகளுக்கு உள் நுழைவதற்காக இரண்டு கதவுகள் வெளிப்புறமிருந்து காணப்படுகின்றன.

ஒரு அறையில் சிறுவர்களுக்கான சீறா வகுப்பை அப்ரா நடாத்திக் கொண்டிருக்க, மற்ற அறையில் யுவதிகளுக்கான குர்ஆன் விளக்கம் நடாத்திக் கொண்டிருந்தனர் பாத்திமாவும் ஹம்தாவும்.

மூன்றாவது அறையில் ஒரு சதுர மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த ஹாலாவும் ரஹ்மாவும் சில கோப்புக்களையும் குறிப்பேடுகளையும் வைத்துக் கொண்டு எதைப் பற்றியே கலந்துரையாடியவாறு இருந்தனர்.

அதுவொரு பொது மண்டபம். ஒரு வருடத்துக்கு முன்னர் அதைக் கவனிப்பவர் எவருமிருக்கவில்லை. அதை முதன்முதலில் சுத்தம் செய்து பயன்படுத்தியோர் கமரிய்யாப் பெண்கள் தான்.

இப்போது அது அவர்களுக்கே சொந்தமானது போல தங்கள் வேலைகளையெல்லாம் அங்கேயே முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு ஒழுங்கான பாதுகாப்பு இன்னும் இல்லாத காரணத்தினால் தங்கள் சிறிய அலுவலகத்தைப் பழைய இடத்திலேயே வைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த அலுவலக அறை கூட நல்லுள்ளம் படைத்த ஒருவர் தனது கடையை அவர்களது பணிக்காக வழங்கியது தான். எத்தனை முறை நன்றி செலுத்தினாலும் அந்த நேரத்தில் கிடைத்த இத்தகைய உதவிகளுக்கு அவை ஈடாக மாட்டா.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now