31 - ஸைலமாஹ்

58 14 15
                                    

வாரங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிரண்டாகி சென்று மறைந்த வேகத்தை நினைவூட்டும் முகமாக, படலையைத் தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்து நான்கு கால்ப் பாய்ச்சலில் தாவியோடி வந்து முற்றத்தில் நின்றது அந்த கம்பீரமான வெள்ளைக் குதிரை.

அதன் கழுத்தைக் கையினால் தடவி விட்டு மெதுவாகக் கீழிறங்கி சேனத்தைக் கழற்றி மீண்டும் சரியாகப் போட்டான் மஸ்லமாஹ். குதிரை நட்புடன் அவனைப் பார்த்துக் கனைத்தது. அதன் முகத்தை இதமாகத் தொட்டு அதன் கனைப்பை ஏற்றுக் கொண்டான்.

'நேரமாகி விட்டது' என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு வீட்டினுள் சென்றான். அங்கு ஏற்கனவே தயாராகி அவன் வரும் வதை காத்திருந்தாள் அவன் மனைவி. "இரண்டு நிமிடம்" என்று இரண்டு விரலை நீட்டிக் காட்டி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சொன்னது போலவே அவன் தயாராகி வந்து விட, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். முற்றத்தில் உயரமாக நின்ற குதிரையைக் கண்டு ஆவலுடன் அருகில் சென்ற ஸைனப் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். "சொன்னது போலவே வாங்கி விட்டீர்களா?" என்று மஸ்லமாஹ்விடம் திரும்பிக் கேட்க,

"அவ்வளவு கஷ்டப்பட்டு குதிரையை அடக்கப் பழகி விட்டு எப்படி சும்மா இருப்பது? பயின்ற வித்தையைப் பயன்படுத்த வேண்டாமா?" என்றவன் காரினுள் ஏறினான். அவனைத் தொடர்ந்து ஸைனபும் ஏறியதும் கார் கிளம்பிற்று.

"கம்பீரமாக இருக்கிறது" என்றாள். வீதியிலேயே பார்வையைப் பொருத்திக் கொண்டு,

"என்னை விடவா?" என்று கேட்டு அவளது முறைப்பைப் பெற்றுக் கொண்டு இளித்து வைத்தான் மஸ்லமாஹ். அமைதியின் சின்னமான மஸ்லமாஹ்வுடன் வாழ்ந்த இந்த இரண்டு வருடங்களில் அவனைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தாள் ஸைனப்.

வேண்டுமென்றே அடிக்கடி அவளை சீண்டுவது அவனது மனமொப்பும் உன்னத தொழில். அவன் எதையோ எதிர்பார்த்துக் கேட்கும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே ஏடாகூடமாகப் பதிலளிப்பது ஸைனபின் பழக்கம். அப்படிச் செய்யும் பட்சத்தில் அவனது குறும்புத்தனம் மேலும் கூடுமே ஒழிய குறைந்த பாடில்லை.

ஔியைத் தேடி...✔Donde viven las historias. Descúbrelo ahora