ஒரு வாசகியின் வார்த்தைகள்

98 9 8
                                    

'ஔியைத் தேடி...'க்கு ஒரு வாசகி இவ்வளவு பெரியதொரு ரிவ்யூவை தருவாரென்று நான் நினைக்கவேயில்லை. அதற்கு இந்தக் கதை தகுதியுள்ளதா? என்றும் எனக்குத் தெரியாது. மிக்க நன்றி சகோதரி!

நீங்களும் வாசித்துப் பார்க்க வேண்டுமென நினைத்து இங்கு அதைப் பதிவிடுகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் மர்யம்..❤

"ஒளியைத் தேடி.."

கதை முடிந்துவிட்டதால் அதைத் தாங்காது வெடித்த என் இதயத்தினுள் தேங்கியிருந்தவற்றுள் ஒரு சிறு.. சின்னஞ்சிறு துளியே இங்கே ஒரு கருத்தாய்.. விமர்சனமாய்.. பாராட்டாய்.. ஊக்குவிப்பாய்..

நீ பாகம் இரண்டு வேறு எழுதுவதாக சொன்னாயா.. அந்த சந்தோஷத்தில் எனக்கு தலைகாலே புரியவில்லை. ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வம் கூடினாலும் குறையாமல் காத்திருக்கிறேன் சகோதரி. நீ ஒழுங்குபடுத்திய பின் கட்டாயம் எழுது, பதிவிடு 🤩 இன்ஷா அல்லாஹ்.. அல் அம்ரீயுடன் பயணிக்கக் காத்திருக்கிறோம், அல் பஷரீ இல்லாமல் 🥺💔

ஒளியைத் தேடி.. அப்டேட் வந்துவிட்டாலே ஏதோவொரு மாயவுணர்வு வந்து என்னைச் சுற்றி வட்டமிடும். என் வாழ்நாளிலே நான் 100% என்னை மறந்து வாசித்த ஒரே கதை இதுதான். இவ்வளவு ஈமானிய உணர்ச்சித் தூண்டல்களைக் கொண்ட ஒரு விலைமதிப்பற்ற நாவல் இலகுவாக வாசிக்க முடியுமாக உள்ளமை.. இதை வாசிக்காதவர்கள் நஷ்டவாளிகள்தாம். எல்லோரும் வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன் 🥺

ஆம், ஒரு புத்தகத்துக்குக் கிடைக்கும் ஆதரவோ அந்தப் புத்தகத்தை வாசிப்போரின் எண்ணிக்கையோ அந்தப் புத்தகம் ஈக்கூட்டம்போல மக்களால் மொய்க்கப்படுகின்றமையோ என்றும் அதன் வெற்றியை முடிவுசெய்வதற்கான விடயங்களாக இருக்க முடியாது. அந்தப் புத்தகத்தினால் வாசகர் மனதிலும் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் பல நிகழ்வதே எழுத்தாளர் அடைந்த மாபெரும் வெற்றி. அதற்கு ஒளியைத் தேடி.. ஒரு சான்று!

அப்படியென்ன அதில் உள்ளதென்று கேட்டாயானால்.. என் வீட்டிற்கு வா, ஒருநாள் முழுக்க கதிரை போட்டமர்ந்து சொல்வேன் அதிலிருந்து நான் எடுத்துக்கொண்ட விடயங்களை. என் மாற்றங்களுக்கு உரமூட்டிய நாவல்களில் தலையாயது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குப் பிடித்த எழுத்தாளரை யாரேனும் வினவினால் உன் பெயரைச் சொல்லும் அளவுக்கு எனக்கு இந்தக் கதை மிகவும் மிகவும் மிகவும் பிடித்தது. இந்தக் கதைக்கு முன் என்னுடையதெல்லாம் வெறும் பொழுதுபோக்குக்கான கிறுக்கல்கள் போலவே உணர்ந்தேன்; உணர்கிறேன்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now