7- யுஸ்ராவின் கதை

69 20 12
                                    

அழகாக விடிந்தது காலை. யன்னலைத் திறந்ததுமே முகத்தில் வந்து மோதிய தூசு கண்களுக்குள் சென்று கண்ணீரை வரவழைத்தது. கண்களைக் கசக்காதிருக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் ஸைனப்.

"என்ன ஸைனப்?" கேட்டவாறே பின்னிருந்து ஹாலா வர,

"கண்ணில் தூசு போய் விட்டது" என்றவாறு யன்னலை வேகமாகச் சாத்தினாள்.

இளந்தென்றல் தான் வீசிய போதிலும் பாலைவன மணலிலிருந்து கிளம்பிய தூசு எங்கும் பறந்து சென்று கொண்டிருக்க, நோன்பு பிடித்துக் கொண்டிருந்தோரின் நாவை வாட்டியது சூரியனின் கடுங்குணம்.

முதலாம் நோன்பு என்பதால் அது அனைவருக்கும் சற்றுக் கடினமாகவே இருந்திருக்கக் கூடும். அன்று அரச விடுமுறை நாளென்பதால் அனைவரும் விடுதியிலிருந்தனர்.

ஸைனப் தனது குறிப்புக்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். பஜ்ர் தொழுததிலிருந்து குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தவள் இப்போது தான் புத்தகங்களைப் பார்க்கிறாள்.

ரமழான் அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமென்பதால் அதனை ரமழானில் அதிகமதிகம் ஓதுவது சிறப்புக்குரியது எனும் விடயம் அனைவருக்கும் தெரியும்.

"ஹாலா எவ்வளவு குர்ஆன் ஓதியிருக்கிறாய்?" ஸைனப் கேட்டாள்.

"உன் அளவுக்கெல்லாம் இல்லை" என்றவள் மீண்டும் தனது குர்ஆனைக் கையில் எடுத்தாள்.

"சரி சும்மா சொல்லேன்" என்று ஸைனப் கேட்க,

"நேற்று இஷாவிலிருந்து ஓதி இப்போது நான்கு ஜுஸ்உக்கள் முடித்திருக்கிறேன்" என்றாள் ஹாலா.

"மா ஷா அல்லாஹ் மிகவும் நன்று" என்று விட்டு மீண்டும் பரபரவென்று குறிப்புக்களைப் புரட்டலானாள்.

"நீ எத்தனை ஸைனப்? எப்படியும் ஒரு..." என்று யோசிக்கும் முன்பே சிரித்த ஸைனப்,

"இப்போதைக்கு பதினாறு" என்றாள்.

"என்ன? மா ஷா அல்லாஹ் சகோதரி. அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! எப்போது ஆரம்பித்தாய்?" என்று ஹாலா வியந்து கூறினாள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now