32 - விஷப்பாம்புகள்

51 13 26
                                    

நிலவு இன்னும் சற்று நேரத்தில் தோன்றி விடுவான் என்று மேற்கு வானம் மெது மெதுவாக சிவப்பேறி நாணங்கொண்ட வேளையது. கழுத்தை நிமிர்த்தி, ஒரு காலை மடக்கி உயர்த்திக் கொண்டு மற்ற மூன்று கால்களையும் பூமியிலூன்றி ஆணழகனாகத் தோற்றமளித்த அந்த வெள்ளைக் குதிரையிடம் கர்வம் நிரம்பி வழிந்தது.

சாதாரண மாலைப் பொழுதோ அது? இல்லவே இல்லை. துன்பங்களைக் கோர்த்துக் கொண்டு அவற்றை அள்ளியிறைத்த அந்தி நேரமது. நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டதற்கு அறிகுறியாக ஆகாயம் கூட முகில்களைப் பரப்பி சோகம் சுமந்தது.

வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு முறை கனைத்தது குதிரை. மஸ்லமாஹ்வின் கார் கேட்டைத் தாண்டி உள்ளே வந்த போது கால்களுக்கிடையில் கயிற்றை இழுத்துக் கொண்டே அருகில் சென்றது. இறங்கி அதனைத் தடவிக் கொடுத்தவன், காலியாகவிருந்த தண்ணீர் வைக்கும் இரும்பு வாளியைக் குழாயினருகே தூக்கிச் சென்றான்.

காரின் ஒசை கேட்டு வெளியே வந்த ஸைனப் அல்பஷரீ அவன் செய்வதை ஒரு குறும்புப் புன்னகையுடன் பார்த்திருந்தாள். வருடங்களுக்கு முன்பு வாளியை ஜின் கொண்டு வைத்ததாக எண்ணி அவன் முழித்த முழி நினைவில் வந்தது.

"இதுவொரு சிறந்த பந்தயக் குதிரை" என்றவாறு நிரம்பிய வாளியைக் கொண்டு வந்து குதிரையினருகே வைத்தான். அதைக் கண்ட ஆடுகள் பொறாமையில் கத்த,

"இதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் ஆசையாகவே இருக்கிறது" என்ற ஸைனப் ஆடுகளுக்குத் தண்ணீர் வைக்கும் நோக்கோடு அவ்விடம் சென்றாள். யூசுப் விரல் சூப்பிய வண்ணம் வாயிலுக்கு ஓடி வர, அவனை அள்ளியெடுத்துத் தலைக்கு மேல் உயர்த்தினான் மஸ்லமாஹ்.

குழந்தை கலகலவென்று சிரித்தது. அவனது கறுத்த தாடியைத் தன் பிஞ்சுக் கையால்த் தொட்டது. மழலையில் ஏதோ சொல்லி விட்டு அவன் தனது கன்னத்தைக் காட்டிய போது எச்சில் முத்தமொன்று பதித்தது.

சயீத் அன்று நேரகாலத்துடன் வீட்டுக்கு வந்து விட்டான் என்பதற்கு அறிகுறியாக தலையிமயிர்கள் நீரினால் குளித்திருக்க, நிலத்தில் அவை துளித்துளியாகச் சொட்டச் சொட்ட வாயிலுக்கு வந்தான்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now