முற்றிற்று!

102 13 27
                                    


السلام عليكم ورحمة الله وبركاته!

அகிலத்தாரின் இரட்சகனுக்கே புகழனைத்தும்!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதுதான்,
கதையின் முடிவு!

"ஔியைத் தேடி..."
இறைவனின் அருளாலும் உங்கள் உதவியாலும் முடிந்து விட்டது.

கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஊக்கமளித்த வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

எல்லாக் கதைகளுக்கும் மகிழ்ச்சிகரமான முடிவு அமைந்து விடுவதில்லை. இந்தக் கதையின் ஆரம்பத்தை யோசிக்கும் முன்னரே முடிவைத் தான் யோசித்து வைத்திருந்தேன்.

முடிவை வைத்துத் தான் அதற்கு முந்தியவற்றையெல்லாம் எழுதினேன்.
இங்கு எழுதப்பட்டவை யாவும் எனது கற்பனையே.

ஆனால் இப்படியொரு கதையை எழுத என்னைத் தூண்டிய என்னவென்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

அது தான்,
"சிறையில் எனது நாட்கள் -
Days of my life - أيام من حياتي"
எனும்,
வீரமங்கை ஜைனப் அல் கஸ்ஸாலி
அவர்களின் வாழ்க்கை வரலாறு.

நிச்சயமாக, அதை வாசித்த போது அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அழுகை தான் வந்தது. ஒரு பெண்ணால் (53 வருடங்கள்) தஃவாப் பணியில் இத்தனை பாரிய பங்களிப்பைச் செலுத்த முடியுமா? என்று வியக்க வைத்தது.

'ஜமாஅத் அஸ்ஸய்யிதாத் அல் முஸ்லிமாத்' எனும் முஸ்லிம் பெண்கள் அமைப்பைத் தோற்றுவித்த எகிப்தியரான ஜைனபுல் கஸ்ஸாலி (மிஸ்ரி) அவர்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். வேறு எந்தப் பெண்ணும் அவற்றை அனுபவித்திருக்க மாட்டாள்.

அவரது வாழ்க்கை வரலாற்றினை வாசித்து ஊக்கம் பெற்றதனால் தான் இப்படியொரு கதை எழுத நினைத்தேன். அவரின் மீது ஏற்பட்ட மரியாதையினால் "ஸைனப்" எனும் பெயரையே தேர்ந்தெடுத்தேன்.

(இரண்டு ஸைனபுகளை ஒரே கதையில் வைத்துக் கொண்டு நான் பட்ட பாடு இருக்கிறதே... இருவரையும் வாசகர்கள் குழப்பிக் கொள்ளாதிருப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்!)

அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக! நம்மனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக!

கதையை எழுதி விட்டேன். இனிமேல் உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருப்பது தான் என் வேலை. மறக்காமல் நீங்கள் நினைப்பதைக் கூறி விடுங்கள் இனிய உள்ளங்களே...

சின்னதாக ஒரு surprise!
"ஔியைத் தேடி..." பாகம் இரண்டுக்காக எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்? இங்கே comment செய்யுங்கள்👉🏻

'இருள் கிழித்த தீபம்'

ஸைனப் அல்அம்ரீயுடனான பயணத்துக்குத் தயாராக இருங்கள். சீக்கிரமே இன்ஷா அல்லாஹ்!

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now