36 - பிரியாவிடை

46 15 21
                                    

ஹஜ் யாத்திரைக்காக அனைத்தும் தயார் நிலையிலிருக்க, மஸ்லமாஹ் மூலையிலமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தன்னைச் சுற்றி நடப்பதனைத்தும் ஏதோ கனவு போல இருந்தது அவனுக்கு.

தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், அவனுக்கும் அவனது மனைவிக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை மற்றவர்களிடம் எப்படி எடுத்துக் கூறுவதென்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

ஸைனப் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருப்பதால் அவளை வர வேண்டாமென்றும், தான் மட்டும் சென்று வருவதாகவும் அவன் எவ்வளவு கூறியும் அவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டேனென்று பிடிவாதம் பிடித்துத் தானும் வருவதாகக் கூறியிருந்தாள் ஸைனப்.

ரிழாவிடம் சொல்லி அவரின் மடியில் புதைந்து கதறியழுதாவது தனது துன்பத்தைக் குறைத்துக் கொள்ள நினைத்த ஸைனப் மஸ்லமாஹ்வின் கெஞ்சுதலுக்கும், வேண்டுகோலுக்கும் இணங்கி கடினப்பட்டுத் தனது மனதைப் பூட்டி வைத்துக் கொண்டாள்.

அல்லும் பகலும் நினைவெல்லாம் அவனாகவே இருக்க, அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாமல் கதிகலங்கிப் போனாள் அவள்.

"என்ன சகோதரி?" அவள் தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது ஸைனப் அல்அம்ரீ வந்து அக்கேள்வியைக் கேட்டிருக்க, திடுக்கிட்டுத் திரும்பியவள் கண்களை விரித்து அவளை சில கணங்கள் பார்த்தாள்.

'தனது சகோதரனின் இழப்பை இவள் எப்படித் தாங்கிக் கொள்வாள்?' என்று சிந்தனை செய்தவள் சட்டென அவ்வெண்ணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டு மெலிதாகப் புன்னகைத்தாள்.

கமரிய்யாவின் அனைத்து அங்கத்தவர்களையும் கூட்டி 'மரணத்தின் பின் வாழ்வு' எனும் தலைப்பில் சொற்பொழிவொன்றை நிகழ்த்திய போது ஒருவரும் எதிர்பார்க்காத வண்ணம் மேடையிலே அழுது விட்டாள் ஸைனப்.

பேசி முடிந்ததும் அனைவரையும் ஆரத்தழுவி விடைபெற்றுக் கொண்டாள். நஹ்லாவையும் ஹம்தாவையும் தனியே அழைத்து,

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now