10 - உன்னைப் போல அவள்

65 19 8
                                    

அன்று இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் அப்ரா. பிள்ளைகள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அடுத்த அறையில் பாத்திமா தஜ்வீத் வகுப்பு நடாத்திக் கொண்டிருந்தாள். மாணவர்கள் எழுத்துக்களை ஊன்றி உச்சரித்துக் கொண்டிருந்த ஓசை வானைப் பிளந்தது.

ஸைனபும் ஹம்தாவும் இதுவரை தாங்கள் செயற்படுத்தி வெற்றி கண்ட விடயங்களைக் குறிந்து ஆராய்ந்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அருகிலிருந்த புத்தக இராக்கையை ஒழுங்கு செய்தவாறே அன்றிரவு தராவீஹ் தொழுகையில் ஓத வேண்டியதை மீட்டிக் கொண்டிருந்தாள் யாஸ்மீன்.

அவள் ஒரு வசனத்தில் பிழை விட, அதைத் திருத்தி விட்ட ஸைனபைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

"ஸைனப் திரும்பவும் ஒரு நாள் மஸ்ஜிதுக்குப் போய் வருவோமா?" ஹம்தா தான் கேட்டாள்.

"ஏன் ஹம்தா? நாம் நன்றாகத் தானே தொழுகை நடாத்துகிறோம்?" என்று ஹம்தாவை ஸைனப் கேள்விக் குறியாகப் பார்க்க,

"அதில்லை... உன்னைப் போலவே ஓதும் அந்த ஹாபிழ் யாரென்று பார்க்க ஆவலாக இருக்கிறது" என்றாள் ஸைனபிடமிருந்து ஒரு திட்டை எதிர்பார்த்துக் கொண்டு.

ஆனால் அவள் எதிர்பார்த்தது போன்று ஸைனப் திட்டவுமில்லை. வேறொன்றும் பேசவுமில்லை. மாறாக அமைதியின் சின்னமாய்த் திகழ்ந்தாளவள்.

"ஸைனப்?"

"ம்ம்...?"

"ஏன் ஒன்றும் பேசாமலிருக்கிறாய்?"

"உனது ஆசைக்கு நான் என்ன தான் சொல்ல ஹம்தா? ஏற்கனவே நான் சொல்லிப் பார்த்து விட்டேன் எனக்கும் அந்த மனிதருக்கும் ஒரு தொடர்புமில்லையென்று" என்று கையை விரித்து விட்டுத் தனது எழுதும் வேலையைத் தொடர்ந்தாள்.

ஹம்தாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. "நான் உன்னை நம்பவில்லையென்றா நினைக்கிறாய்? உனக்கே தெரியாமல் எவராவது இருக்கலாமல்லவா? கொஞ்சம் தேடிப் பார்க்கலாமென்று ஆவலாக இருக்கிறது. உனக்குப் பிடிக்காவிட்டால் நான் ஒன்றும் செய்யவில்லை" என்றாள் ஹம்தா.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now