27 - முசய்யபின் சகோதரி

57 19 19
                                    

"...இஸ்லாத்தில் பெண்ணின் அந்தஸ்து மிகவும் கண்ணியமும் உயர்வும் கொண்டதாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு பெண்ணின் தாக்கம் முக்கியமானது. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு மகத்தான அந்தஸ்து இருப்பதற்குக் காரணம் ஒரு மகளாக, மனைவியாக, தாயாக அவளது பங்கு முக்கியமானது. அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் பெண்கள் பற்றியும் அவர்களது உரிமைகள், அஸ்தஸ்துக்கள் பற்றியும் குறைவில்லாமல் பேசப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்குர்ஆனில்
'அந்நிஸா'- 'பெண்கள்' என்று ஒரு தனி அத்தியாயத்தையே அருளியுள்ளான். அதை வைத்தே பெண்களுக்கு நமது மார்க்கம் வழங்கியுள்ள உயர்ந்த ஸ்தானத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வரையறையுடன் கூடிய உரிமைகளை நமக்கு இஸ்லாம் வழங்கித் தானுள்ளது. நாம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறாது நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பற்றி நாம் ஏற்கனவே கதைத்துள்ளோம். அத்தனை சுதந்திரமும் உரிமைகளும் வழங்கியுள்ள நமது மார்க்கத்துக்காக நாம் என்ன கைம்மாறு செய்தோம்? என்ன செய்கின்றோம்?

இந்தக் கேள்வி ஒவ்வொரு முஸ்லிமாஹ்வினதும் உள்ளத்தில் எழ வேண்டும். அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நமது சத்திய மார்க்கத்துக்காக, அதன் வளர்ச்சிக்காக நம்மாலான பணியை நிச்சயம் நாம் செய்தாக வேண்டும்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் அல்லாஹ் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறான். அவை ஏதற்காக? உள்ளே பூட்டி வைத்துக் கொண்டிருக்காமல் சமூகத்தின் நலனுக்காக அவற்றைச் செலவிடுவது நமது கடமையாகும். ஒருவருக்கு ஒரு சிறிய நல்ல விடயத்தை எத்தி வைப்பது கூட சதகாவாகும். அவர் அதைக் கடைப்பிடித்து நடக்கும் காலமெல்லாம் உங்களுக்கும் அந்த நன்மை கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஒருவருக்கு உங்களால் நேர்வழி கிடைத்து விட்டால் அது எத்தனை நன்மையை உங்கள் ஏட்டில் கொண்டு வந்து சேர்க்குமென்பதை யோசித்துப் பாருங்கள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now