உயிரின் தாகம் காதல் தானே..💔01

3.7K 39 3
                                    


அது பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.. பெரிய பெரிய பங்களாக்களே அதிகம் உள்ளன அந்த தெருவில். அதில் உள்ள ஒரு வீட்டில் அழகிய காலை பொழுதில் வேலைக்காரர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தனர் ..

"மதிமா.. நீங்க போய் ஒரு ஓரமா இருங்க. நான் இதையெல்லாம் பார்த்துக்கிறேன் .." என அங்கு இருந்த ஒரு வயதான பெண் கூற அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்து கொண்டு இருந்தாள் அவரால் மதிம்மா என அழைக்கப்பட்ட மதியழகி ...


அவரோ அவளது கையை பிடித்து தடுத்து
"ஏன்ம்மா இப்படி பண்றீங்க.. எனக்கு பார்க்கவே கஷ்டமா இருக்கு தெரியுமா ...இதை நாங்க பண்ண மாட்டோமா?"
என மன வருத்தத்துடன் அவளது முகம் பார்த்தபடி கேட்டார்..


அவர் தனக்காக வருந்துகிறார் என உணர்ந்து கொண்ட மதியழகி "நானும் இங்கே ஒரு வேலைக்காரி தானேம்மா... என் வேலையை நான் பார்க்கிறேன் விடுங்கம்மா..." எனக் கூறினாள்.. அவள் முகம் எப்போதும் போல அமைதியாக இருந்தது ..அதற்கு மேலும் அவரால் என்ன செய்திட முடியும் .

எனவே அவர் வேலைகளை கவனிக்கலானார்.
ஆனால் மனம் என்னவோ மதியழகிக்காக  கவலை கொண்டது... அவருக்கு இருந்த கவலை மதியழகிக்கு இல்லை போலும் ..எந்த விதமாக முகச் சுழிப்பும் இல்லாமல் வேலை செய்தாள் அவள் ..


அந்த இடத்தில் வேலைகள் அமைதியாக நடந்து கொண்டு இருக்க அந்த அமைதியை கலைக்கவென்று வந்து சேர்ந்தார் அந்த வீட்டின் எஜமானி வடிவுக்கரசி.. பெயருக்கு ஏற்றவாறு ராணி போல்  அந்த வீட்டில் வளம் வந்தார்  அவர்... வயது அறுபதுக்கு  மேல் இருக்கும்... வயது தான் ஏறியதே தவிர எந்த விதமான நற்குணங்களும் இல்லை அவரிடம்..


சமையல் அறைக்குள் நுழையும் போதே 
"அடியே மதி.." என்று குரல் கொடுத்த படியே தான் உள்ளே வந்தார். அவரது குரல் கேட்டு காய்கறி வெட்டிக்  கொண்டு இருந்தவளது கை ஒரு நொடி தனது வேலையை நிறுத்தி மீண்டும் வேலைகளை செய்தது.

உயிரின் தாகம் காதல் தானே...Onde histórias criam vida. Descubra agora