உயிரின் தாகம் காதல் தானே 💔 19

1.6K 35 9
                                    

தனது பெயரை மெல்லிய புன்னகையுடன் அழுத்தமாக அவள் கூற தீபக்கிற்கு இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் தீர்ந்து போனது .  அவளை இப்படி பார்க்கும் போது அவனுக்கு நிறைவாக இருந்தது.
அவள் ஷியாம் சுந்தரிடம் இருந்து தப்பிச் சென்று நல்ல நிலைமையில் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியே.
அதற்கு மேல் அவளை தெரிந்ததை போல் அவன் எதுவும் பேசவில்லை.

அமைதியாக தனது கடமையை செய்து கொண்டு இருந்தான் அவன். அதனால் மதியழகியும் அமைதியாகவே இருந்து விட்டாள். முயன்று தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷியாம் சுந்தரின் வருகைக்காக காத்திருந்தாள் பெண்ணவள்.

அவர்களையெல்லாம் சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறிய தீபக் வெளியே சென்று விட்டான்.
அவன் கூறியதைப் போல அடுத்த ஐந்து நிமிடங்களில் "தட்... தட்" என்று சத்தம் மதியழகியின் காதுகளுக்கு கேட்டு  பழைய நினைவுகள் எழுந்து அவளை மிரட்டியது.

ஆனாலும் அவள் வெளியே தைரியமாகத் தான் இருந்தாள் ‌
...
இதற்கு மேலும் அவனுக்கு பயப்படக் கூடாது என்று மீண்டும் மீண்டும் தனக்குள் கூறிக் கொண்டாள் அவள் .
ஷியாம் சுந்தர் முன்னாள் வர அவனுடன் தீபக் மற்றும் இன்னும் சில பேரும் அவனது பின்னால் வந்தனர்.

அங்கு நடுநாயகமாக போடப்பட்டு இருந்த இருக்கையில் வந்து கம்பீரமாக அமர்ந்தவன் அனைவரையும் தன் லேசர் கண்களால் ஒரு நொடி அளவிட்டான்.
அப்போதே அவனது கண்கள் மதியழகியை கண்டு கொண்டதாக அவனது நெற்றி சுருக்கமே காட்டிக் கொடுத்தது.

ஆனால் அடுத்த கணமே முகத்தை இயல்பாக்கி கொண்டவன் எல்லோருக்கும் வணக்கம் கூறினான். மதியழகியும் முகத்தில் பயத்தை காட்டாதவாறு அனைவரோடும் சேர்ந்து அவனுக்கு பதில் வணக்கம் கூறினாள்.
அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது திட்டத்தை எல்லோருக்கும் அவன் விளக்க ஆரம்பித்தான். இதில் மதியழகுக்கு   முழு திருப்த்தி.
அவர்களிடம் வேலைக்கு என்று போதிய ஆட்களும் இருந்ததால் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டாள் அவள்..

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now