உயிரின் தாகம் காதல் தானே...💔03

1.8K 32 2
                                    

வேலை நடக்கும் இடத்திற்கு வந்து நின்றது அந்த கருப்பு நிற கார். அதில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்தான் ஷியாம் சுந்தர். அவனது பின்னால் அவனது உதவியாளன் தீப்பக்கும்  அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகவே அவன் பின்னால் வந்தான் .. அன்றைய அவனது வேலைகளை பட்டியலிட்ட படியே தான் நடந்து சென்றான் தீபக்.

அவனுக்கு இது பழகிய ஒன்று தான் .
எப்போதும் இப்படித் தான் நேரத்தை வீணடிக்காது இது போன்ற நேரங்களில் அவன் செய்ய வேண்டிய வேலைகளை கேட்டுக் கொள்வான் ஷியாம் சுந்தர்.

வேகமாக நடந்து வந்தவன் அங்கே தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்தான். தீபக்கையும் அமரும் படி சைகை செய்ய வேணடாம் என்று மறுத்தான் அவன். தினமும் இப்படித் தான் அவனை அமரும் படி கூறினாலும் மறுத்து விடுவான். தீபக்கிற்க்கு  அவன் மீது அளவு கடந்த மரியாதை இருப்பதால் அவன் முன்னால் உட்காரவே மாட்டான்..

" நீ எனக்கு தம்பி மாதிரி. இன்னொரு தடவை என்னை சொல்ல வைக்காதே உட்காரு.."என்று ஷியாம் சுந்தர் கண்டிப்பாக சொல்லவே அதை தட்டாமல் அங்கு உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவன்..

" அப்புறம் சொல்லு வேலை எல்லாம் எப்படி போகுது? எந்த தடையும் இல்லை தானே..?"
ஷியாம் சுந்தர் சந்தேகமாக கேட்க என்ன சொல்வது என தெரியாமல் முழித்தான் தீபக் ..அவனது முழியை வைத்தே ஏதோ இருக்கிறது என அறிந்து கொண்ட ஷியாம்
"யார் பிரச்சினை பண்றது?" என்று தனது தாடையை தடவியபடி கேட்டான்...

அவன் நேரடியாகவே கேட்ட பிறகு பதில் சொல்லாமல் இருந்தால் அவ்வளவு தான் என புரிந்து கொண்ட தீபக் பயத்துடனே
" அன்பு செல்வன்..." என்று மட்டுமே கூறினான்.

இந்த பெயரை கேட்டு ஷியாம் ஒன்றும் அதிர்ந்து விடவில்லை. அவன் மனதில் யூகித்த பெயரை  தான் தீபக் கூறி இருந்தான். இது இன்று நேற்று அல்ல ஷியாமின் தந்தை சேகர் தொழில் செய்யும் போது இருந்தே நடக்கும் ஒன்று தான்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now