உயிரின் தாகம் காதல் தானே...💔 08

1.6K 32 8
                                    

அண்ணன் எப்படியாவது இந்த அரக்கனிடமிருந்து தன்னை மீட்பான் என்ற நம்பிக்கையில் தான் மதியழகி ஒவ்வொரு நொடியையும் கழிக்க தொடங்கி இருந்தாள்.
அந்தப் பெரிய பங்களா போன்ற வீட்டில் அனைத்து வேலைகளையும் தனியாக செய்வது பெரும் பாடாகிப் போனது அவளுக்கு.

அவனுக்கான உணவையும் அவள் தான் சமைக்க வேண்டும். தோட்ட வேலை , வீட்டு வேலை என்று அனைத்து வேலைகளும் அவள் தலையில் தான். அதிலும் அவளுக்கு விதவிதமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று வகை வகையான உணவுகளின் பெயரை கூறி சமைக்க சொல்லுவான்.
தனக்கு தெரிந்த வகையில் செய்து வைப்பாள் அவள்..

அதில் சிறிய  தவறு இருந்தாலும் அப்படியே அவளது மேல் வீசி எறிந்து விடுவான்.
சில நேரங்களில் அந்த உணவு சூடானதாகவும் இருக்கும். வலித்தாலும் அவன் முன்னே அவள் அதை காட்டுவது இல்லை.

இன்றும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று பாயாசம் செய்து வைக்கும் படி கூறியிருந்தான். காலையிலிருந்து வேலை செய்து வெறுத்துப் போனவளாக தான் அந்த பாயாசத்தை செய்தாள் மதியழகி. இரவு அலுவலகத்தில் இருந்து வந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவு உண்ண வந்து அமர்தான் .


அவனை கண்டதுமே அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கத் தொடங்கி விடும். அவளை அவளது தாய் எவ்வளவு தைரியமான பெண்ணாக வளர்த்த போதும் அவனைக் கண்டால் மட்டும் பயம் தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் அவளிடத்தில். அவளது தைரியம் எங்கே போனது என்று கூட அவளுக்கு தெரியாமல் போகும்.

அவன் அமர்ந்ததும் அவனுக்கு அமைதியாக உணவு பரிமாற ஆரம்பித்தாள் .
அவனும் அங்கு தனக்கு பிடித்த பாயாசம் இருப்பதைக் கண்டு அதனை  எடுத்து  பருக ஆரம்பித்தான். முழுதாக அவனால் ஒரு வாய் கூட ஒழுங்காக பருக முடியவில்லை..

அதிக அளவு உப்பு சேர்க்கப் பட்டு இருந்தது அதில்..
"ச்சீ.." என்ற படி வாயில் இருந்ததை  வெளியே துப்பினான் அவன். அவனுடைய செய்கையில் என்னவாக இருக்குமோ என்று பயந்து போனவள் அவனையே பார்த்து இருந்தாள்.


உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now