உயிரின் தாகம் காதல் தானே..💔16

1.6K 34 3
                                    

ஐந்து வருடங்களுக்கு பிறகு....

"தான்வி குட்டி.. ஆருத் கண்ணா.. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க. விளையாடினது போதும் .."
என கனகா வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகளை அழைத்தார் ‌.
" இதோ வந்துட்டோம் பெரியம்மா.."
என்று சத்தமாக கூறிய தான்வி தனது இரட்டை சகோதரனான ஆருத்தை பார்த்து

"வாடா உள்ளே போகலாம் .அம்மா வந்தா திட்டுவாங்க.
ரொம்ப நேரமா வெளியிலே இருக்கோம் ."
என கூறி விட்டு வீட்டை நோக்கி சிட்டாக ஓடி சென்றாள் அவள். பின்னே ஆருத்தும் வீட்டிற்குள் சென்றான் நிதானமான
நடையோடு .

ஆருத் தான்வி இருவரும் மதியழகியின் நான்கு வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள். தான்வி குறும்புத்தனம் நிறைந்தவள் ..
ஆனால் அதற்கு மாறாக ஆருத் அழுத்தமானவன் .
இருந்தும் வீட்டினரிடமும் நண்பர்களுடனும் தான் அவன் சிரித்து பேசுவான் .

ஆனால் வெளி ஆட்கள் யாரிடமும் எளிதில் பேசி விட மாட்டான். அவனிடம் எப்போதும் ஒரு அழுத்தம் ஒட்டிக் கொண்டே இருக்கும். தான்வி , ஆருத் இருவரும் தீர்க்கமாக பேசக் கூடியவர்கள். மறந்தும் மழலை மொழி பேசி விட மாட்டார்கள்.

இப்போது சாத்விக் தங்கையையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டான். எங்கு இருந்தாலும் சொந்த மண்ணில் இருப்பது போல் ஒரு திருப்தி கிடைப்பதில்லை அல்லவா.
தனது தொழிலை சென்னைக்கு மாற்றியவன் சில மாதங்களாகவே சென்னையில் தான் வசித்து வருகிறான்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் தங்கையையும் குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தான்.. மதியழகியை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதே அவனது ஆசை. அவனுடன் சேர்ந்து அவளும் தொழிலை பார்த்துக் கொள்கிறாள் இப்போது.
முன்பை விட தைரியமான பெண்ணாகவும் கம்பீரமான தோற்றத்தோடும் வலம் வருகிறாள் அவள் .

அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு குழந்தைகளை அன்புடன் கவனித்துக் கொள்வது என்னவோ கனகா தான் ‌‌.
அவரை
' பெரியம்மா...'
என்று அழைக்க பழக்கியிருந்தாள் மதியழகி.
சென்னை வந்த பிறகு நேற்று தான் ஒரு பாடசாலையில் இருவரையும் சேர்த்து விட்டு இருந்தனர்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now