உயிரின் தாகம் காதல் தானே..💔18

1.6K 34 5
                                    

"அம்மா ப்ளீஸ்மா.. என்னை கம்பெல் பண்ணாதீங்க. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை . வேணும்னா அண்ணாக்கு கல்யாணம் பண்ணி வைங்க .."
என கோபத்தில் பொறிந்து தள்ளினாள் வருணிக்கா.

மீனாவிற்கு இருக்கும் ஒரே கவலை மகன் மற்றும் மகளினது திருமணம் தான்.
ஷியாம் சுந்தரிடம் இதைப் பற்றி பேசவே அவருக்கு பயம் .
அதனால் தான் தினமும் மகளிடம் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் கூறுவது. பெண் பிள்ளை வேறு அல்லவா ..வயது ஏறிக் கொண்டே போகும் போது சராசரி அன்னைக்கு தோன்றும் பயம் தான் அவருக்கும் தோன்றிற்று.

அவர் எப்போது கேட்டாலும் சொல்லும் பதிலையே தான் இன்றும் கூறுகிறாள் அவள். அவர்களுக்கு அருகில் அமர்ந்து இருந்த ராகவ்வும் இந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அவரது சிறு வயதிலேயே பெற்றோர் இறந்து விட மீனாவின் பெற்றோரிடம் தான் அவர் வளர்ந்து வந்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் மீனாவுடன்
' அக்கா.. அக்கா '
என்று பாசமாக இருப்பார்.

இப்போதும் மீனாவின் வீட்டில் தான் இருக்கிறார். தன்னால் முடிந்த மட்டும் ஷியாம் சுந்தருக்கு தொழிலில் உதவுகிறார் அவர்.

"ஏண்டி இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க. யாரையாவது காதலிக்கிறாயா ?
அப்படின்னா சொல்லித் தொலை
கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இப்படி கல்யாணம் வேணாம்னு மட்டும் சொல்லிட்டு திரியாத‌."
அவரது பேச்சு ஆதங்கமாக வெளிப்பட்டது.

அன்னை அப்படி கேட்டதும் பழைய நினைவுகள் கண்முன்னே தோன்றின அவளுக்கு.
சாத்விக் தன்னை தேடி வருவான் என நம்பினாள் அவள் .
ஆனால் இன்று வரை அவன் வரவே இல்லை.
' என்னை விட அந்த மதியழகி தான் முக்கியமா போச்சு அவருக்கு ..'
என கோபமாக மனதில் எண்ணிக் கொண்டாள் பெண்ணவள்.

அவனை மறக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டாள். அவனை மறக்கிறேன் எனக் கூறிக் கொண்டு அவனை மேலும் அதிகமாக நினைத்தாள் என்றே கூறலாம்.
சில நேரம் 'அன்னை சொல்வதைப் போல் யாரையாவது திருமணம் செய்தால் என்ன?'
எனத் தோன்றும் .

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now