உயிரின் தாகம் காதல் தானே 💔 31

2K 36 5
                                    

சாய்வாக  கட்டிலில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தவளின் அருகே வந்தார் கனகா.
ஆழ்ந்த யோசனையில் இருந்தவளின் தோளில் கை வைத்து அவளது யோசனையை கலைக்க நிமிர்ந்து கனகாவின் முகம் நோக்கினாள் மதியழகி.
" என்ன மதிம்மா... இப்படி யோசிச்சிட்டு இருக்க..?" என்றார் கனகா..

" அச்சோ ஒன்னும் இல்லை அக்கா. சும்மாவே இருக்க போர் அடிக்குது அதனால தான்.."
என்று சமாளிப்பாக மதியழகி கூற கனகாவும் அதனை நம்பி விட்டார்.

மேலும் அவரே
" ஆனா ஒன்னு மதிம்மா.. உன்னோட புருஷன்  உன்னை நல்லபடியா பார்த்துக்க சொல்லி எங்க கிட்ட வந்து சொன்னார் ..அவர் முன்னே இருந்ததை விட ரொம்ப மாறிட்டார்.. அவர் கண்ணுல உனக்கான கவலை தெரிஞ்சது..ஆனா அதை அவர் வெளியே காட்டிக்கல.. எப்படியெல்லாமோ  பசங்களை பார்த்துக்கிறார். அதேபோல உன்னையும் பார்த்துக்கிட்டா எனக்கு அதுவே போதும்..."
என்றார்..

கனகா கூறுவதையே கேட்டுக் கொண்டு இருந்த மதியழகிக்கும் ஷியாம் சுந்தரின் நடவடிக்கை மீது சந்தேகம் தோன்றத்தான் செய்தது. அவன் முன்பு போல அவளிடம் நடந்து கொள்வது இல்லை.
ஆனாலும் நன்றாக நடந்து கொள்கிறான் என்றும் கூறி விட முடியாதே.

அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை அவளால் ...எனவே கனகா கூறிய அனைத்துக்கும் வெறுமனே  தலையாட்டி வைத்தாள் அவள்..
இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கழிந்து  விட்ட போதும் சாத்விக் அவளை  வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாலும் இன்னுமே  உடம்பில் சிறிதளவு வழி இருந்ததாலும் வீட்டிலேயே தான் இருந்தாள் அவள்‌.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க முடியாத காரணத்தால் எழுந்து சென்று சுற்றி அந்த அறையை ஆராய ஆரம்பித்தாள்.
அவர்களது அறையில் இருந்து  செல்லும் ஒரு கதவு வழியாக தான் அவனது அலுவலக  அறை இருந்தது.  அவன் அங்கு செல்வதை அவள் கவனித்து இருக்கிறாள்..

அந்த அறையிலாவது  வாசிப்பதற்கென்று புத்தகங்கள் இருக்குமா என்று பார்க்க  அறைக்குள் சென்றாள் மதியழகி ..
சும்மாவே இருந்து அவளுக்கு போரடிக்க செய்தது.
அந்த அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது.. அங்கு ஒரு இடத்தில் புத்தகங்கள்  நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன..

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now