உயிரின் தாகம் காதல் தானே...💔02

2K 34 3
                                    

வசந்தி கணவன் இறந்த பிறகும் அந்த வீட்டை விட்டு செல்லவில்லை. மகளை கூட்டு குடும்பத்தில் வளர்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. பணம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை ...அத்தையும் அந்த வீட்டின் மூத்த மருமகளும் சரியில்லை என்று தெரிந்தாலும் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுடன் நன்றாகவே பழகினார்.


மகளை தைரியமான  பெண்ணாக வளர்க்க எண்ணி சிறு வயதில் இருந்தே தாய் தந்தை இருவரும் அவளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுத்தனர்.. மதிக்கு படிப்பும் நன்றாக வரும் அதே வேலை அவளுக்கு இசையிலும் நாட்டம் அதிகம்.. அதனால் சிறு வயதிலேயே  இசையை முறையாக கற்றுக் கொண்டாள் மதி..



எந்த விதமான மன நிலையில் அவள் இருந்தாலும் பாட்டு கேட்பது அவளது வழக்கம்.. தந்தை இறந்த பிறகு பாட்டி தனது தாய்க்கு எதிராக பல வேலைகளை செய்கிறார் என்பதை அவள் அறிந்தே இருந்தாள்.
அவள் சுட்டித்தனம் நிறைந்த பெண்.. அதே போல கோபமும் அதிகம் வரும் அவளுக்கு..

வடிவுக்கரசிக்கோ வசந்தி பேசாமல் தான் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்கையில் உள்ளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவார் அவரை ...இதை அறிந்த மதி அவரிடம் சண்டைக்கு போக அதையும் தடுத்தார் வசந்தி..


அதற்கு அவர் மதியிடம் காரணமும் சொன்னார்..
" இங்க பாரு மதிம்மா. நான் வேலை செய்வதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் ஒரு ஏழை. அதனால் இது எனக்கு பெருசா தெரியல. நம்ம வீட்டு வேலையை நாம தானே செய்யணும்.. நீயும் வேலைக்கு தயங்கவே கூடாது.. சரியா?
அப்புறம் நானும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணது தான் உன்னோட பாட்டிக்கு பிடிக்கல ..அதனால அவங்க கோபத்தை எல்லாம் என்னை திட்டியே தீத்துக்குறாங்க.. அதை பெரிசாக்க வேண்டாம்.." என மகளிடம்  அமைதியாக எடுத்துக் கூற தாய்க்காக சரி என்று கூறி விட்டாள் மதி.




ஆனால் வசந்தி நினைத்ததை விட மோசமாக இருந்தார் வடிவக்கரசி. இளைய மகனின் சொத்துக்கள் அனைத்தும் மதிக்கு 18 வயதாகும் போது அவளது பெயருக்கு மாறி விடும்.. எனவே அதை தடுக்க எண்ணி வசந்தி இடம் பேசினார் அவர்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now