உயிரின் தாகம் காதல் தானே..💔34.

1.8K 36 3
                                    


இப்படியே அவர்களது வாழ்க்கையில் சில மாதங்கள் வேகமாக கடந்து சென்றன.
அன்பரசன் - வசந்தி பெயரில் அவர்கள் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நல்ல முறையில் ஆரம்பித்து வைத்தனர்.. இதற்கு ஷியாம் சுந்தர் அதிகளவான உதவிகளை அண்ணன் தங்கை இருவருக்கும் செய்தான்..
ஆனால் சாத்விக்கும் அவனும் சரியாக பேசிக் கொள்வதும் இல்லை.. அதற்காக முறைத்துக் கொண்டு சுற்றுவதும் இல்லை.. நேரில் பார்க்க நேர்ந்தால் மெல்லிய புன்னகையுடன்  கடந்து விடுவர்.. தீபக் மூலம் அனைத்து உதவிகளையும் செய்தான்..

சாத்விக்கிடம் திருமணத்தை பற்றி பேசினால் பிடி கொடுக்காமல் சுற்றிக்கொண்டு இருந்தான் அவன். வருணிகாவிற்கு அவனது நிலை நன்றாகவே தெரிந்து இருந்ததால் அவள் அமைதியாகவே இருந்து விட்டாள் ‌. அவனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி அவள் வற்புறுத்தவில்லை..

மதியழகியும் கனகாவும் தான் தினம் ஒரு முறையாவது இதை பற்றி  பேசுவது.. இப்போது கனகா நான்கு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்மையாகவே சந்தோஷத்தை உணர்ந்தாள் மதியழகி. எப்படியோ அவரது வாழ்க்கை சீராகி விட்டது என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.. அவர் நன்றாக வாழ்வதைப் பார்த்து அவள் மகிழ்ச்சி அடையாத நாளே  இல்லை என்று கூறலாம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாத்விக் அங்கு குழந்தைகளுடன் விளையாடுவதற்காக வருவான் என்பதை அறிந்த மதியழகி கனகா இருவரும் ஒரு முடிவுடன் அவனது வருகைக்காக காத்திருந்தனர்.. அவர்களது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மாலை நேரம் போல் அவனும் அங்கு வந்து சேர்ந்தான்.. சிறிது நேரம் அவன் போக்கிலேயே அவனை விட்டுவிட்டு கனகாவும் மதியழகியும் அவன் அருகில் போய் நின்றனர் ..அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டது எதைப் பற்றி அவர்கள் பேசப் போகின்றனர் என்று..

" எனக்கு முக்கியமான வேலை இருக்கு ..நான் வரேன்..."
என கூறிவிட்டு அங்கிருந்து நகர போனவனை பிடித்துக் கொண்டாள் மதியழகி.
" அண்ணா இன்னைக்கு உன் கூட பேசியே ஆகணும் ..இப்படி உட்காரு.."
என்று அவனை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு இருவரும் அவனை சுற்றி நின்று கொண்டனர்..

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now