உயிரின் தாகம் காதல் தானே..💔33

2.1K 38 8
                                    


முதலில் கண்விழித்தது என்னவோ மதியழகி தான் ..
மெல்ல கண்களை திறந்தவள் சுற்றும் மற்றும் பார்க்க அவள் அருகிலேயே கண்ணீருடன் அமர்ந்து கொண்டிருந்த கனகா தான் அவளது கண்களுக்கு முதலில் தெரிந்தார்.

அவளுக்கு தான் எதுவும் நினைவில் இல்லையே ..எனவே கேள்வியாக அவரைப் பார்த்தபடி எழுந்து கொள்ள முயற்சிக்க அப்போது தான் அவளது உடலில் ஏற்பட்ட வலியை உணர்ந்து கொண்டவள் முகத்தை சுருக்கிய படி அப்படியே படித்துக் கொண்டாள்.

அவள் கண்விழித்ததை உணர்ந்த கனகா வேகமாக அவளிடம் வந்து "அம்மாடி மதிம்மா அப்படியே படுத்துக்கோ..."
என்று அவளிடம் கூறிவிட்டு வெளியே சென்று சாத்விக்கை அழைத்து வந்தார்.

அங்கு அண்ணனையும் கண்டவள் "அண்ணா எனக்கு என்ன ஆச்சு? உடம்பெல்லாம் யாரோ அடிச்சு போட்டது மாதிரியே வலிக்குது.. ஆனா எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல.." என்று கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் தனது தாடையை தடவிக் கொண்டு இருந்தான் அவன்.

அவனது தடுமாற்றத்தை புரிந்து கொண்டவளுக்கு எதுவுமே சரியாக படவில்லை.. திடீரென குழந்தைகள் நினைவும் கணவனது நினைவும் வர
"அண்ணா பசங்க... அப்புறம் அவர் எல்லாரும் எங்கே...?" என்று பதட்டமாக சுற்றிப் பார்த்தபடி கேட்டாள்.
இதற்கு மேல் அவளிடம் மறைத்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் தனக்கு தெரிந்த வகையில் நேற்று நடந்ததை கூறினான்.

அதைக் கேட்டவளுக்கு இதயமே நின்று போன உணர்வு..
" அண்ணா நான் அவரை பார்க்கணும்.. அவருக்கு ...அவருக்கு என்னன்னு பாக்கணும் ...இப்பவே கூட்டிட்டு போ என்னை.. ப்ளீஸ் அண்ணா..." இன்று கண்களில் நீர் வழிய கெஞ்சிக் கொண்டு இருந்த மதியழகியை தான் அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்து இருந்தனர் கனகா மற்றும் சாத்விக் இருவரும்..


அவர்களுக்கு தானே தெரியும் எத்தனை தூரம் அவள் ஷியாம் சுந்தரை வெறுத்தாள் என்று.. இன்று என்னவென்றால் அவனுக்கு ஒன்று என்றதும் இப்படி கிடந்து தவிக்கிறாளே என்று அவளையே தான் பார்த்து இருந்தனர்..

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now