பகுதி-1

26.2K 322 379
                                    

விழிகள் பேசுதே💗

உன்
கண்கள் என்னும்
சிறையில் அடைப்பட்டேன்
காதல் கைதியாக........

எல்லா காதல் கதைகளும் ஒரே மாதிரி தான்....கண்ணும் கண்ணும் பல மொழிகள் பேசும்,இரு இதயங்கள் இணையும்,நீ இன்றி நானில்லை என வாக்குகள் பரிமாறப்படும்....

இனி வாழ்வில் அவன் இல்லை என நினைக்கும் அவள்...
அவனே அவளுக்கு எல்லாவுமாக மாறினால்?????

அவன் விழியில்
கைதியானவளின் காதலைக்
காண்போம்......

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

அந்த மண்டபமே மகிழ்ச்சியில் நிறைந்து காணப்பட இரண்டு இதயங்கள் மட்டும் சோகமே உருவாய் அமர்ந்திருந்தனர்....

வெளியே வாழை மற்றும் மாவிலை தோரணங்கள், வண்ண வண்ண விளக்குகள்,பெரிய வாசலில் பத்து பதினைந்து பெண்கள் சேர்ந்து போட்டது போல் தெரியும் கோலம்,தடபுடலாக விருந்து,மத்தளம் மற்றும் நாதஸ்வரத்தின் இசை ,அதுமட்டுமல்லாது இதுவரை வந்த தமிழ் பட கல்யாண பாடல்கள் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்தது.....

அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு ஹல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு
அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு

குழந்தைகள் மண்டபத்தை சுற்றி அங்கும் இங்கும் வண்ணத்துப் பூச்சிகள் போல் சுற்றிக் கொண்டிருக்க....இளைஞர்கள் கூட்டமோ தங்களுக்கு ஏற்ற பெண்களை இப்போதாவது காண மாட்டோமோ என்ற ஏக்கத்துடனும்,
பெண்கள் அன்று தான் பூத்த புத்தம்புது மலர்கள் போல இளைஞர்களை கண்டுக் கொள்ளாதது போல் நடித்துக் கொண்டும்,
தந்தைமார்கள் தங்கள் நண்பர்களுடன் கடலைப் போட்டுக் கொண்டும்,
தாய்மார்கள் தங்களின் புடவை மற்றும் நகைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தனர்....

மண்டபத்திற்கு நேரெதிராக ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு மணமகனின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி....(சோகமாக உள்ள ஒரு இதயம்)

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now