பகுதி 36

4.2K 203 171
                                    

மொட்டுச் சிரிப்புல ஒறைஞ்சிக் கெடக்கிறேன்
கிட்ட நடக்கையில் கெறங்கித் தவிக்கிறேன்
ஆத்தாடி உசிரெல்லாம் ஒழுகித் துடிக்கிறேன்
உறவாக உன்ன நான் கடவுள் கிட்ட கேட்டு வாங்குவேன்

என்ன தான் உறவுகள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் லோகநாதனின் மீது தனிப்பிரியம்  அகிலாவிற்கு.

தூரத்து சொந்தம் தான் என்றாலும் அண்ணா அண்ணா என்று அவரையே சுற்றி வருவார்.

மனோவின் தந்தை இறந்த போது அவளுக்கு ஆறுதலாக இருந்தவர்.எவ்வளவு வற்புறுத்தியும் தன்னுடன் வர ஒத்துக் கொள்ளாததால் அகிலாவின் மீது கோவம் கொண்டு கிளம்பிவிட்டார்.
அதனாலே மனோவை அடிக்கடி அவரின் இல்லத்திற்கு அகிலா அனுப்புவார்.

லோகநாதன்-காயத்ரி தம்பதியினரின் அரும்புதல்வி தான் நந்து என்கிற நந்தினி.
(மேஹாவோட பெஸ்ட் ப்ரெண்ட் மனோவோட குட்டிமா)

நந்து பிறந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் தான் தன் 4 வயது மகனை அழைத்து கொண்டு அவளைக் காண வந்திருந்தார் அகிலா.

அவர்களை வரவேற்ற லோகு மனோவின் உயரத்திற்கு அமர்ந்து
"மனோ உனக்கு மாமா அழகான தேவதையை கிப்ட்டா கொடுக்க போறேன்...நீ தான் அந்த தேவைதை நல்லா பாத்துக்கணும் அவளை விட்டு பிரியாம உன் கூடயே வெச்சுக்கணும் சரியா??" எனக் கேட்க

அவனுக்கு என்ன புரிந்ததோ வேகமாக தலையாட்டினான்.
உள்ளே தொட்டிலில் இருக்கு போய் பாரு எனக் கூற வேகமாக ஓடினான்.

அவன் சென்று கண்டது பிங்க் நிறத்தில் வாயில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரிக்கும் அழகிய நிலவைப் போல் மின்னும் மேஹாவைத் தான்.

நந்து தான் உள்ளே இருப்பாள் என எண்ணி தான் லோகு அவனிடம் அப்படி கூறினார்.
மனோவிற்கு நந்துவை திருமணம் செய்து வைத்து தன் பாசமான தங்கையை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆசை.

ஆனால் அவன் கண்டதோ அவனின் நிலா...

மேஹாவும் அவனைப் பார்த்தால் மட்டும் அவ்வளவு அழகாக புன்னகைப்பாள்.
அவனும் அவள் புன்னகைப்பதையே  பார்த்துக் கொண்டிருப்பான்.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now