பகுதி 30

4.9K 235 250
                                    

ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும்அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்
உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே

அந்த மண்டபமே "என்னாடா இது ஒரு பெரியவர் கூட இல்லை போல"  என்பது போல் நண்பர்களால் நிறைந்திருந்தது.
ஆம் நாளை நம் அர்ஜுனின் திருமணம்.

அவன் தான் ஒருவரைக் கூட விடுவதில்லையே...அனைவரிடமும் எளிதில் நட்பு பாராட்டி விடுவான்.

கல்லூரி முதல்வர் முதல் அங்கே வேலை செய்யும் ஆயா வரை அனைவருக்கும் இவனைத் தெரியும்.

தன் பேச்சால் அனைவரையும் கவருபவன்.

இப்போது கூட மணமகள் அறையில் சஞ்சுவை அவள் தோழிகள் கலாய்த்துக் கொண்டிருக்க

அதற்கு மாறாக மணமகன் அறையில் அவன் அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

"ஏன் டா நாயே...அர்ஜுன் வெட்ஸ் சஞ்சனா போட்ட என்ன ஆகிடுவ நீ...உன் மேரேஜ் நின்னு போயிடுமா ?அஜூ வெட்ஸ் சஜூ போட்ட தான் நான் தாலி கட்டுவேனு சொன்னயாமே..." அபி கேட்க

"ஈஈஈ ஆமாடா மச்சான்"எனக் கூறிக் கண்ணடித்தவனை

"எதை கொண்டு அடிப்பேனு தெரியாது.
இந்த டைம்ல எப்படி டா மாத்த முடியும் நாளைக்கு தான் உனக்கு மேரேஜ் நியாபகமிருக்குல"

"இருக்கு டா ஆனாலும்...நான் என் செல்லத்தை சஜூனு தானே கூப்பிடுவேன்"

"என் வாய்ல இருந்து இப்போ உன்ன எப்படி கூப்பிடுவேனு தெரியாது...வாய மூடிட்டு இருந்தா உனக்கு நல்லது "என அபி கூற

அர்ஜு வாயை மூடிக் கொண்டான்.
மற்ற நண்பர்கள் எல்லாம் இவன் நிலையைப் பார்த்து  சிரிக்க அதற்கு காரணமான அபியை முறைத்துக் கொண்டிருந்தான்.

அபியை பொறுத்த வரை அவன் அமைதி எல்லாம் கிடையாது...பெண்களிடம் மட்டும் தான் பேசமாட்டான்.
ஏதாவது கேட்டால் ஒன்றிரெண்டு வார்த்தை...
அபி மற்றும் அர்ஜூ  ஒன்று சேர்ந்து விட்டால் அந்த இடத்தை ஒருவழி செய்து விடுவார்கள்.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now