பகுதி 7

5.9K 247 272
                                    

உன்னை பார்த்தாலே bp ஏறும்
என் happy life sad'ஆ மாறும்
நீ ஒசாமானா நான் ஒபாமாடி
அட உன் death'து என் கைலடி
உன் face'அ நான் பார்த்தா போதும்
என் bad time'மு start ஆகும்
முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா

அதிகாலை எழுந்ததிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது....
எது தெரியுமா??
சண்டை....
டாம் அண்ட் ஜெர்ரி கூட தோற்றுவிடும் இவர்களின் சண்டைக்கு முன்னால்....
சிறு சிறு செயல்களுக்குக் கூட சண்டை தான்...

ஏய் ஏண்டி என் பேஸ்ட் எடுத்த??...
ஏய் ஏண்டி என்னோட தோசையை சாப்பிட்ட....
இன்னைக்கு நீ தான் வீடு கூட்டனும்!!!
இந்த சம்(கணக்கு) கூட தெரியல?? அவள் மண்டைக்கு சில பரிசுகளைக் கொடுத்துக் கொண்டே....

ஏண்டா நான் அயர்ன் பண்ணி வைச்ச டிரஸ்ஸை கலச்சுவிட்ட??
அம்மா😥😥சட்னிய காலி பண்ணிட்டான்.....
இன்னைக்கு நீ தான் பாத்திரம் கழுவனும்!!!!
எதுக்குடா கொட்டுற? எனக்கு தான் இந்த சம் போடவே தெரியமாட்டிங்குதே!!!
அய்யோ!!!என் லாலிபாப்பை காணோம்??எருமை எருமை....எங்கே என்னோட லாலிபாப்???
(லாலிபாப்பைப் பார்த்தாலே அவனுக்கு வெறி வந்து விடுகிறது...அது குப்பைத் தொட்டிக்கு போய்விடும்...அவள் அவனை வெறுப்பேத்துவதே இதை வைத்து தான்)

இதெல்லாம் ஜஸ்ட் சாம்பில் தான்...மெய்ன் பிக்சர் மெதுவாக வரும்😂😂

ஏய் இன்னைக்கும் ஆட்டோல போயிடு...நான்லாம் உன்னைக் கூட்டிட்டு போக மாட்டேன் என அவன் கூறிக் கொண்டே திரும்ப....
அவளும் அதே சமயத்தில் அறையிலிருந்து வெளியே வந்ததால் அவன் மீதே மோதினாள்.....

இருவர் கண்களும் பார்த்துக் கொண்டே இருக்க....
அவன் கண்களை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள்...

ஆட்டோகாரன் வந்து ஹாரன் அடித்த பின் தான் சுயநிலைக்கு வந்தனர்...

அய்யோ அவன் தலையில் அடித்துக் கொண்டே டிவியின் அருகே உள்ள கரும்பலகையில் ஏற்கனவே எழுதியிருந்ததை அழித்து விட்டு
"இன்னும் 360 நாட்கள்" என எழுதினான்....

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now