பகுதி 54

3.2K 168 138
                                    

இருளினுள் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளை போக்கும் காதல் பார்வையில்
உலகமே காலின் அடியிலே
உயிரே உயிரே உந்தன் பொருளே

காதல் பலவித மாயஜாலங்களை செய்யக் கூடியது.
அதுதான் அபிக்காக தன் அன்புக்குரிய தந்தையை இழக்கச் செய்தது.
அதே காதல் தான் இன்று தன்னவளுக்காக தன்னவளின் தந்தையையும் தேடியும் வர வைத்தது.

காலடியில் அமர்ந்தவனை யாரென்று அவர் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காமல் போக அவன் கண்ணீர் மட்டும் அவர் பாதங்களில் மன்னிப்பை நாடி இறைஞ்சிக் கொண்டிருந்தது.

யாருப்பா நீ என்று கேட்டேக் கொண்டே வந்த தியாவின் அத்தையைக் கண்டு எழுந்தவன் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு அவரைப் பார்த்து சிரித்து ஓரக்கண்ணில் தன் மீசை மாமனாரைப் பார்த்தவாறே
"ஈஸ்வர மூர்த்தியோட மருமகன் " என்று கூறி அவர் மீசையை முறுக்க

அந்த நொடி தியாவின் நியாபகம் அவரைத் தாக்க அவனைக் கண்டு மகிழ்ந்தாலும் அடுத்த நொடியே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்ட மாமனாரை பார்த்து சிரித்தவன் தியா அத்தையின் காலில் விழுந்தான்.

"அய்யோ என்ன தம்பி என் காலுல விழுந்துட்டு எழுந்துருங்க" என்றவரிடம்

"நான் 100 வருசம் உங்க தியாகூட சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுங்க மா" எனக் கூறியவனிடம்

"நீங்க இரண்டு பேரும் 16ம் பெற்று பெருவாழ்வு வாழணும்" என்ற கூறியவரிடம்

"அப்படியே என் மீசை மாமா எங்களை ஏத்துக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க மா " என்றவனை கண்டு முறைத்த மூர்த்தி இப்போது தன் தங்கையையும் முறைக்க அபியின் செயலில் சிரித்தவர் அவன் சொன்னபடியே ஆசிர்வாதம் செய்து அவனை எழுப்பி விட்டார்..

"அப்புறம் மா என்ன ஸ்பெஷல் செம பசி" என்றவாறு உள்ளே சென்றவன்
சுடசுட நெய் வாசம் மூக்கை துளைக்க தட்டில் வைத்த வெண்பொங்கல் சர்சரென்று தொண்டைக்குள் இறங்க "தியாக்குட்டி உன் சமையல் குரு கௌரி அம்மா தானா..." என்று தன் மனைவியின் சமையலைப் பற்றி நினைத்தவன்  புரை ஏறும் அளவு சாப்பிட

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now