பகுதி 5

7.8K 277 344
                                    

உன் துணை தேடி நான் வந்தேன்
துரத்தாதே டா
உன் கோவம் கூட நியாயம் என்று
ரசிதேனே
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா...

காதல் எப்போது யாருக்கு யார் மீது வரும் என எவரும் அறிவதில்லை....
ஒருவரை ஏன் பிடித்தது?எதற்காக பிடித்தது எனக் கூட அறியாமல் அவரின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்...
அவர்களுக்காக எதையும் செய்யலாம் என எண்ணம் கூட சில சமயங்களில் எழும்.....
ஒருவர் மேல் வந்த ஈர்ப்பைக் கூட காதல் என எண்ணி சீக்கிரம் காதலில் விழுந்து அதே சீக்கிரத்தில் அதை முறித்துக் கொள்பவரும் பலர்.....
தனக்கு வந்தது காதல் தானா என்று கூற சிலர் அறிவதில்லை...
அப்படி தான் நம் மேஹாவும்...

அவன் மேல் உள்ளது காதல் தான்....ஆனால் வெளியே க்ரஸ் என்று சுத்திக் கொண்டிருக்கிறாள்.

மெத்தையில் மனோ சரிய மனோ மச்சான் என கத்திக் கொண்டே வந்தான் முகில்.....

என்ன டா அவன் எழுந்திரிக்காமலே கேட்க....

"டேய் நம்ம ஹெச்ஓடி(HOD) விருந்துக்கு வர சொன்னாரு நியாபகம் இருக்குள்ள...ரெடியாகு போ...."

"ஆமா இதெல்லாம் ஒரு கல்யாணம்...இதுக்கு விருந்து ஒன்னுதான் குறைச்சல்"அவன் கேட்க

"ஆமா...குறைச்சல் தான்...ஒழுக்கமா போய் கிளம்புற வழிய பாரு..."என்று கூறிவிட்டு கீழே வந்தவன் மேஹாவை ரெடியாக சொன்னான்....

அவள் வந்து இருவருக்கும் ஒரே நிறத்தில் உடை எடுத்து வைத்துவிட்டு
அவள் ரெடியாகிய பின் மனோவை கிளம்ப சொன்னாள்....

"எனக்குத் தெரியும் "....என்று கூறிவிட்டு
குளிக்க சென்று விட்டான்...

கீழே சென்று சோனியுடன் பேசிக் கொண்டிருக்க மனோ கீழே இறங்கி வந்தான்....

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...
அடர்ந்த கேசம் அதை அடிக்கடி சரி செய்து கொண்டு இருக்கும் கைகள்...
அவன் கேசத்தைக் கண்டால் கண்டிப்பாக அதில் விளையாட தோன்றும் அந்த அளவு பரந்து விரிந்த கேசம்...
கூர்மையான புருவங்கள்,ஆயிரம் மொழி பேசும் கண்கள்,தமிழ்நாட்டு பையன் என்பதற்குரிய கெத்து தெரியும் அவன் நடையில்,மாநிறம்,எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதைக் காட்டும் இதழ்கள்,சரியான உடல்வாகு.......
ஒட்டுமொத்தமாக ஹாய் ஹேண்ட்ஸம் ஹாய் ஹேண்ட்ஸம் எனும் அளவிற்கு 😋😋😋😍😍😍😍

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now