பகுதி 2

10.1K 274 562
                                    

இப்பொழுதும் நம்பமுடியவில்லை...
தன் சங்கு கழுத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவன் தான் உன்னவன், உன் கணவன் என உரைத்தும் கூட.....

எத்தனை கனவுகள்,தோழிகளின் தாங்கிக் கொள்ள முடியாத கேலி பேச்சுகள்,சில சமயம் தன்னையும் அறியாமல் வெட்கப்பட்ட தருணங்கள்......மறக்க முடியுமா அவளால்....

ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே
ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்

அவன் தான்...
அவனே தான்...
அவளருகில்...
இனி யாரை தன் வாழ்வில் சந்திக்கவே முடியாது என நினைத்தாளோ அவன்...
யார் கண்களைக் காண முடியாமல் போய்விட்டதே என பல இரவுகள் அழுது தீர்த்தாளோ அவன்...
தினமும் காலை அணியும் ஆடை அவனின் ஆடை நிறத்திற்கு மேட்சாக இருக்குமா என நினைத்து யாரைப் பார்க்க துடித்தாளோ அவன்....
எங்கு தோழிகள் சிரித்து,கிண்டலடித்து பேசினாலும் அவனை வைத்து இவளை கலாய்த்த தருணங்களை நினைத்து யாருக்காக ஏங்கினாளோ அவன்......

தன் கண்களை நம்பாமல் அவனையையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
அவள் பார்ப்பதை அவன் அறிந்தும் கண்டு கொள்ளாமல் தன் அன்னைக்காக புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தான்...

திருமண வரவேற்பு......
மண்டபத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக, புன்னகை முகமாக சுற்ற... மேடையை அலங்கரிக்கப் பயன்பட்ட பூக்கள் கூட புன்னகையால் பூத்துக் குலுங்க...

அவன் மட்டும் புன்னகைக்க கடினப்பட்டு கொண்டிருந்தான்...

அவள் முகம் அவள் சிரிக்கவே தேவையில்லை என்பதுபோல் ஜொலித்தது.....(1000 வாட்ஸ் பல்பு போல)(அவள் சிரிப்பது இதுதான் கடைசி என அறியாமல்....)

வெட்கமே இல்லாமல் அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்....
இன்றும் ஒரே நிற ஆடை...அவளும் அவனும்....இது நடப்பது தான்(இது எப்போ)

அவள் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் அவள் புறம் திரும்பவில்லை....
பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தான்...(என் ஹீரோவ ரோபோனு நினைக்காதீங்க....அவர் இப்போ தான் அப்படி....பிளாஸ்பேக் கேட்டா உங்களுக்கும் கனவு நாயகன் ஆகிருவாறு...எனக்கும் கூட)

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now