பகுதி 52

3.1K 136 45
                                    

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

தன் கைகளில் இருக்கும் பாக்ஸை ஓப்பன் செய்ய சொல்ல " ஆமால நான் இதை மறந்துட்டேன் " என்றவள் அதைத் திறந்து பார்க்க அவள் கண்கள் வியப்பில் விரிந்தது...

கண்களில் கண்ணீரோடு அவள் அப்படியா எனக் கேட்க ஆமாம் என்றவனின் கண்களிலும் கண்ணீர் தான்.

அவனை அணைத்துக் கொண்டவள் " லாலிபாப் நிஜமா நிஜமா" எனக் கேட்க
" நிஜம் தான் " என்றவன் இன்னும் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான்.

மனோவிடம் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அகிலாவுடன் பேசும்பொழுது மேஹாவின் புலம்பல் எப்போதும் எனக்கு அங்க இருக்கதான் பிடிக்குது அகி பேபி இங்க நானும் உங்க பையனும் மட்டும் இருக்க நல்லவே இல்லை என்பது தான்...

இப்போது மேஹாவின் பெற்றோரும் அகிலாவுடனே தங்கிவிட தினமும் அகிலாவிடம் புலம்புவது தான் மேஹாவின் வேலை ஆனால் மனோவின் முன்பு செய்ய மாட்டாள்.

மேஹாவைப் பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே...
அவளுக்காக அவனுக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டான்.
அதற்கான ரிசைக்னேஷன் லெட்டர் தான் அந்த பெட்டிக்குள் இருந்தது.

"லாலிபாப் உங்களுக்கு பிடிச்சதே டீச்சிங் தான் எனக்காகவா இதை வேணாம்னு சொல்லிட்டு வரீங்க" என்றவள் கண்களில் கண்ணீருடன் கேட்க

" ச்ச ச்ச நானும் எவ்ளோ நாள் தான்
தனியா உன் டார்ச்சரை அனுபவிக்கிறது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றவன் சிரிக்க

அவனை பார்த்து முறைத்தவள் சிரித்துக் கொண்டே அணைத்துக் கொண்டாள்.

அவளுக்காக அவன் வேணாம் என்றதன் மதிப்பு அவளுக்குத் தான் தெரியுமே...
பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கும் அவனுக்கும் இந்த கல்லூரிக்குமான தொடர்பு.
படித்தது இங்கே தான்...
கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் இங்கேயே வேலைக்கு சேர அதுவே அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றானது.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now