26-அழகான நாட்கள்

1.2K 39 0
                                    

அவர்களது காதல் அழகாக சென்றது ஒரு வருடமும் தாண்டி எனிவர்ஸரிக்காக அவுட்டிங் செல்வது என்ற ஐடியாப்படி  இருவரும் செல்ல கிடைக்காததை பூர்த்தி செய்ய ஒரு மாதம் கழித்து பீச் சென்றனர்
இப்போதுல்லாம் ஷ்ருதி  ஸ்கூல் படிப்பூ எல்லாம் முடிந்து காலேஜில் கால் பதித்து இருந்தாள்.

கடலோரத்தில் இரூவரும் அமர்ந்திருந்தனர் அந்த நேரமாக பார்த்து "ஹேய் ப்ரஷாத்" என்ற கூவலோட அவனது காலேஜ் நண்பர்கள் அவனை நோக்கி ஓடி வந்தனர்....

"அய்யோ மாட்டிக்கிட்டேனே" என்ற எரிச்சலோடு ஷ்ருதியை நோக்கினான். அவள் அதை விட  டென்ஷனும் பயமுமாக நிற்பதை கண்டு அவள் கையை பற்றி  "நீ பயப்படாத நான் இருக்கேன்ல இவங்க என் ப்ரன்ட்ஸ் தான்" என்றும் பயத்துடனே நின்றாள்

அதற்குள் மிக அருகில் வந்த நண்பர்கள் "மச்சா என்னடா இது காலேஜ் கட் அடிச்சிட்டு இங்க ஒரு பிகர கரெக்ட் பன்டு இருக்கியா....?" என்று கேட்டு கொண்டே வந்தான் ஒருவன் உடனே "பிகருலாம் இல்லா ஷீ இஸ் மை பியான்ஸ் ஷ்ருதிகா" என்று அறிமுகப்படுத்தினான் அவன்.

உடனே அனைவரும் கோரஸாக "ஹாய் ஸிஸ்டர்" என்றார்கள் அதனுடன் ஒருவருக்கு பின் ஒருவர் அறிமுகமும் படுத்தி கொண்டார்கள்."

"ஸோ எப்போதுல இருந்து லவ்?" என்று ஒருவன் கேட்டதும்  "இப்போ தான் ஒரு வரூஷம் தாண்டி இருக்கு" என்றான் சிவா.

உதட்டை கடித்த படி  அதை தலையாட்டி புன்னகைப்போடு ஷ்ருதியும் ஏற்று கொண்டாள்.

"ஒரு  வருஷம் ஆயிறுச்சா வாட்? என்று ஒருவன் அதிர்ச்சியாக, மற்றவன் காரியத்தில் கண்ணாய் "அதுல இது தான் முதல் டேட்டிங்கா  இல்ல?" என்று கேட்டதும் "இதான் டா முதல் டேட்டிங்" என்றான் அப்பாவியாய்

"என்னடா இவ்ளோ போர்ரா இருக்க ஒரு வருஷம்  கழிச்சி தான் முதல் டேட்டிங்கா" என்று ஒருவன் நக்கலாக சொல்லவும்  "பார்த்த பத்தாவது நொடியே  டேடிங் போறது தான் லவ்வா? ச்சீ எனக்கு அதுலாம் செட் ஆகாது பட் கண்டிப்பா பார்த்த மறு நாளே டேடிங், டேடிங் போன மறு நாளே ப்ரேக்கப் பன்ற காலமும் வரும் நீங்கல்லாம் இருக்கும் வரை" என்று விட்டு அவனே "இன்னார் தான்னு ஆனதற்கு அப்பறமா நாட்களாக இருந்தா என்ன வருஷங்களாக இருந்தா என்ன டேடிங் போனா என்ன போலேன்னா என்ன?" என்று ஷ்ருதி வாய் திறந்து கேட்டு விடவும் அனைவரும் அவனை வாழ்த்தினர் "மச்சா வெரி குட் சொய்ஸ்டா" என்று சிவாவுக்கும் உண்மையில் பெருமிதம் தான் 
அதில் படிப்பு தல ஒருவன் "மச்சா போன வருஷம் அமேரிக்கா போற அந்த ஸ்கொலர்ஷிப்ப நீ மிஸ் பன்டேன்னு பீல் பன்னேல்ல பட் இந்த தடவை எஸ் பீ ப்ரதர்ஸ் என்ற ஒரு கம்பெனி திரும்ப ஒரு (offer) ஒபர்  தர்றாங்களாம் அதுவும் அமேரிக்காலயே பெஸ்ட் யுனிவர்ஸிடில படிக்கிற சான்ஸ் தானாம் பட் டூ இயர்ஸ் தானாம் இன்னைக்கு ப்ரபஸர் சொன்னார் நீ இந்த தடவையாச்சும் எழுதுவியா?" என்று கேட்டதும் புருவங்களை உயர்த்தி சந்தோசமாக அவனுக்கு கை கொடுத்து விட்டு "இந்த தடவை அமேரிக்கா போறது நான் தான்" என்றான் அத்தோடு நண்பர்கள் சென்று விடவும் அந்த எக்ஸேமை மறந்து "தேங்க் யூ ஷ்ரூதி" என்றான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now