28-புது நண்பி

1.2K 40 0
                                    

மனிதர்கள் மொழி கலாச்சராம் என்று மொத்தமும் வேறு பட்ட நாடான அமைரிக்கா அவனுக்கு ஏனோ அந்நியமா தோன்றவில்லை காரணம் அந்த பெயர் பெற்ற யுனிவர்ஸிடியில் தமிழர்கள் நின்றமை தான்.
திலீபன் என்ற சென்னையை சேர்ந்த ப்ரபஸரும் இருந்தார்.

பாலக்காட்டை சேர்ந்த மலையால பெண் ஒருத்தியும் தன்னுடனே படிக்க வந்து இருந்ததால் சிவாவுக்கு 'இது போதும்' என்று தான் ஆகி போனது 

"ஹாய் நீங்க இந்தியா தானே?" என்று சிரித்த முகமாக கேட்டதும் தலையாட்டியவள் கை கொடுத்து  "ஐயம் தாரினி ப்ரொம் பால்காட் யூ?" என்று விட்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.

"ஐயம் சிவப்ரஷாத் க்ருஷ்ணா ப்ரொம் தமிழ்நாடு"

"சென்னையே?" என்று கேட்டாள் மீண்டும் கேள்வி பார்வையோடு "ஹம் நீங்க மலையாளமா?" என்று அவனும் கேட்டதும்

"அம்மா சென்னை அப்பா பால்காட்  ஸோ எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்" என்றாள் புன்னகைப்போடு

"வாவ் பிஸினஸ்  பற்றி படிக்கிறீங்க பெமிலி பிஸினஸ் இருக்கா?" என்று கேட்டான்
தலையாட்டி விட்டு
"இல்லா இல்லா எனக்கு பிஸினஸ் பிடிக்கும் அவ்வளவு தான்" என்றாள் புன்னகைப்போடு

அந்த தாரணியின் இந்த அளவுக்கு மீறிய அழகுக்கு காரணமே புன்னகைப்போடு பேசுவது தான்.
"வெரி குட் அப்பறம் ஸ்கொலர்ஷிப்ல வந்தீங்களா?"

"ஹான் ஆமா நீங்க?"

"நானும்" என்று விட்டு புன்னகைத்தான்.

"இங்க எத்தனை வருஷமா படிக்குறீங்க?" என்று தாரணி கேட்டதும் சிரிப்போடு "கிட்ட தட்ட இரண்டு இயர்ஸ்க்கு மேல இந்தியால படிச்சிட்டேன் மீதமுள்ள இரண்டு இயர்ஸ் தான் இங்க படிக்கனும்" என்றான் தெளிவாக
பின்பு அவனே "நீங்க எங்க பெட்ஜா?" என்று கேட்டதும் "நோ நோ நான் ஐந்து இயர்ஸ் படிக்க வந்தேன்  இது என் பெஸ்ட் இயர்" என்றாள் புன்னகைப்புக்கு பாதிப்பின்றி

"அப்போ நீங்க என் வயசு இல்லயா?" என்று ஒரு மாதிரி கேட்டான் சிவா
"என்ன பார்த்தா அப்டியா தோன்றுது?" என்று கேட்டதும் "நோ நோ  பட் நினைச்சேன் சாரி" என்றதும் அவள் புன்னகைப்போடு அவனை  பார்த்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now