19-இது என்ன மாயை

1.3K 43 0
                                    

அடுத்த  மூன்று நாள் சைனா அதற்கு அடுத்த மூன்று தினங்கள் ப்ரான்ஸ் என்று மொத்தம் ஒன்பது நாள் கேம்ப்க்காகவும் அன்று சாயங்காலம் என்பதால் விடியகாலை வரலாம் என்பதே சிவாவின் ப்லேன். எனவே மொத்தம் பத்து நாட்கள் வெளிநாட்டில் சிலவு செய்து விட்டு சென்னை வந்தாள்....  வந்தவளை அழைத்து செல்ல எயார்போட் வந்தான் அஷ்வின் "ஹேய் அங்க என்ன தான் நடந்திச்சி எதுவும் கிளியரா சொல்லவே இல்ல?" என்று கேட்டபடியே அவளது பேகை எடுத்தான் "என்னையும் தமிழயும் தவிர நீங்க இவ்ளோ நாள் எதை பற்றியும் யோசிக்கலை போல"

உடனே அவளை பார்த்து புன்னகைத்து விட்டு "நீ வேற அப்டிலாம் இல்ல சக்தி. நான் உங்க அக்காவ எதிர்தது அனுப்பி வெச்ச பயணம் இல்லயா இது, ஸோ நீ சரியான முடிவு எடுத்தன்னா தான் திருப்தியா உங்கக்கா முகத்த பார்க்கலாம் இல்ல... நீ கொஞ்சம் மனசு விருப்பப்படி முடிவு எதாச்சும் எடுத்து இருக்கன்னா உங்க அக்கா கிட்ட அடி வாங்கி சரண்டர் ஆயிறலாம்ல..."

அஷ்வினின் வேடிக்கை கலந்த கண்டிப்பில் தன்னை மறந்து சிரித்தவள் "ஏன் மாமா என் மேல நம்பிக்கை வெச்சி தானே நீங்க இவ்ளோ தூரம் அனுப்பினீங்க  அப்பறம் எதற்கு என்குவய்ர் எல்லாம்... நல்ல முடிவு தான்" 

அவனும் புன்னகை மாறாமல் "நல்ல முடிவு எடுத்துறுப்ப அது சரிடா  பட் யாருக்கு நல்ல முடிவுன்னு சொல்றீயா என்ன?"  என்று கேட்டவனது சார்ப்பில் மவுனமாக சிரித்தவள்

"நீங்க எந்த மாதிரி முடிவு  எதிர் பார்க்குறீங்கன்னு சொல்லுங்க அப்பறமாக நான் சொல்றேன் முடிவு உங்களுக்கு சாதகமாக பாதகமான்னு"

"பிரிஞ்சிட்டீங்கன்னா சந்தோசம்" என்று விட்டு நாக்கை  கடித்து   ஒரு செய்கை செய்யவும் "அப்போ முடிவு உங்களுக்கு சாதகம்ன்னூ வெச்சி கொங்களேன்"  என்றாள் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு
அவள் அப்படி சொன்னதுமே நடையை நிறுத்தி அவளை உற்று நோக்கி 'உண்மையா?' என்பது போன்று கண் புருவங்களை உயர்த்தி கேட்டான். இமைகளை மூடித் திறந்து 'உண்மையே' என்பது போல் அவளும் செய்கை மூலம் பதில் சொன்னாள்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz