12-குற்ற உணர்வில்

1.5K 57 1
                                    

காலையில் அக்காவும் அம்மாவும் வரும் முன்பே தமிழை அனுப்பி விட்டு தானும் உடுத்தி கொண்டு காலேஜ் சென்றாள் சக்தி

காலேஜில் படித்து கொண்டு இருக்கும் போது டிங் டிங் என்ற சத்தத்தோடு குறுந்தகவல் ஒன்று வரவும் சட்டென்று மேசைக்கு அடியில் மொபேலை எடுத்து படித்தாள் "சக்தி நான் ஆட்டோவ வெச்சிட்டு காலேஜ்க்கு பக்கத்து தெருவுல உள்ள மால் கிட்ட நிப்பேன். நீ வந்து என்ன சவாரி போக கூப்ட்ற மாதிரி கூப்டு என்ன" என்று தான்  அனுப்பி இருந்தான் "எதுக்கு?" என்று மெஸேஜை போட்டதுமே "உன்கிட்ட பேசனும்" என்று அனுப்பினான் '
'சரி' என்று  ரிப்லை செய்து விட்டு  காலேஜ் முடித்ததுமே அதன் படி அவளும் அவனை சந்திக்க சென்றாள். நேராக ஓர் வீட்டுக்கு கூட்டி சென்று அமர வைத்தவன் அவளருகிலே  தானும் உட்கார்ந்து கொண்டான்.

தலையை கீழே போட்டு இருந்தவன் என்ன நினைத்தானோ திடீர் என்று அவள் கைகளை பற்றி கொண்டு "சக்தி என்ன மன்னிச்சிக்கோ என்ன? நேற்று என்னன்னமோ ஆயி போச்சி" என்று பேச துவங்கினான். 
ஆனால் அவனது பதற்றத்திற்கும் பயத்திற்கும் முற்றுபுள்ளி இட்டால் போன்று அவனை தடுத்து அவன் தலையை தன் கைகள் மூலம் உயர்த்தி  "இதுல உன் தப்புன்னு ஒன்னுமில்ல தமிழ் என் தப்பே எதுவுமில்லன்னு நினைக்குறவ நான்" என்றதுமே அவளை அதிர்ச்சியோடு நோக்கி என்ன சொல்ற என்பது போல் லுக்கு விட்டான்  

"எக்சுவலி  ஸெக்ஸ்ங்குறது எனக்கு தெரிஞ்சி தப்பான விஷயமில்லயே தமிழ். நம்ம வீட்ல பசங்கல வயசுக்கு வந்ததுமே கல்யாணம் பன்னி வைக்கிறாங்கல்ல அதுக்கு காரணம் கூட இது தானே அவங்க காட்றவங்கள நாங்க  கல்யாணம் பன்னிக்க போறதில்ல நீ தான் எனக்கு நான் தான் உனக்கு. ஸோ இதுல தப்பே இல்ல ஒகேவா  தாம்பத்யம்ங்குறது உச்சகட்ட அன்போட வெளிப்பாடு அத பணத்துக்காகவோ இல்ல சும்மா மிஸ் யூஸ் பன்றதுக்காகவோ பன்னா தான் தப்பு.... நமக்குன்னு எழுதிவெச்சவன் கூட பன்றதுல தப்பில்ல பட் இது இனி தொடரவும் கூடாது யேன்னா தொடர்ந்து பன்றதுக்கு ரொம்ப சரியான விஷயமும் கிடையாதுல்ல...." என்று தெளிவாக கூறி முடித்த தன்னவளின் உச்சியில் முத்தமிட்டு  "ஐ லவ் யூ டா கண்ணம்மா...எக்சுவலி நீ தப்பா நினைச்சிட்டியோன்னு ரொம்ப கவலை பட்டேன் இப்போ தான் நிம்மதியாக இருக்கு" என்றான்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now