49

1.5K 42 6
                                    

அடுத்த நாள் காலையில் இட்லி செய்து கொடுத்தாள் சக்தி சாப்பிட்டு விட்டு "நல்லா இருக்குமா" என்றான் சிவா...

சக்திக்கு நிஜமாகவே அவனது அந்த நல்லா இருக்குமா என்ற வார்த்தை புதிதாக இருந்தது சக்தி நம்பாமல் அவனை ஒரு மாதிரி பார்த்து வைக்கவும் அருகில் வந்து "உன்ன லவ் பன்லாம்ன்னு இருக்கேன் உனக்கு ப்ராப்ளம்லாம் இலல்யே....?" என்று கேட்டு விட்டு புன்னகைப்போடு அவளையே பார்த்தான்.

அந்த நொடி சிறகுகள் இருந்தாள் சக்தி வானில் தான் பறந்து இருப்பாள். அப்படி ஒரு குதூகலம் அவளுக்குள் ஆனால் அதை வெளிக்காட்டாது "புரியலை" என்றாள்.

உடனே அவளது கன்னத்தை கிள்ளி விட்டவன் "வயசாகிறுச்சுல்ல எனக்கு சரியா ப்ரபோஸ் கூட பன்ன வரலன்னா பார்" என்று விட்டு அவளது பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக வெளியேறி சென்று விட்டான்.

"என்னங்க" என்று கத்தி கத்தி அவன் பின்னாடியே சென்றாளும் அவளுக்கு எந்த ரெஸ்பொன்ஸும் இன்றி ஆபிஸுக்கு சென்று விட்டான்.

"ம்மா பாட்டி இன்னைக்கு வருவாங்கல்ல நான் ஸ்கூல் போகாம இருக்கட்டுமா" என்று தாரா சிந்து வீட்டில் வைத்தே கூறி விட்டதால் அவள் பாடசாலை போகவில்லை

சிவா சென்றதில் இருந்து கையும் ஓடாது காலும் ஓடாது சிலையென அமர்ந்திருந்தாள் சக்தி  தாரா "விளையாடா வாங்கம்மா" என்று அழைத்தும் செல்லவில்லை....

பதினொரு மணிக்கு எல்லாம் அம்மா அக்கா மற்றும் மாமா வந்து விடவும் தாராவுக்கு உலகே மறந்து தான் போனது.

சக்தி சமைக்கவென்று தயாராகும் போதே "இன்னைக்கு வீட்ல இருந்து சாப்பாடு அனுப்புவாங்க சக்தி நீ சமைக்க வேண்டாம்" என்று விட்டார் அஷ்வின்

"சரி மாமா" என்றதும் "அங்க எல்லாருமே உன்ன கேட்டாங்க" என்றான்

"அச்சோ அப்டியா.... ஆமா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா மாமா"

"ஆமாம்மா... சரி நான் ஹாஸ்பிடல் போறேன் இன்னைக்கு ஏதோ மீடிங்ன்னு சார் மைல் பன்னி இருந்தார் நேரத்துக்கு போகலைன்னா சங்கு தான்" என்றதும்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now