17-பிரிவொன்றை சந்தித்தேன்

1.3K 54 1
                                    

அவள் கண்கள் கலங்கி விட்டதை உணர்ந்தும், தான் உணர்ந்து விட்டதை உணர்த்த விரும்பாது பேசலானான்
"எக்சுவலி உன்னையும் தாரகியையும் அங்க விட்டுடு முதல் தடவை வந்து இங்க ஐந்து நாள் இருந்தேன்ல அப்போ குன்னூர் வர முன்னாடி தாராவுக்காக வேண்டிக்கிட்டு ஒரு பரிகாரம் பன்ன கோயில் போனப்ப, அங்க ஒரு அழகான கல்யாணம் நடந்துச்சு. எக்சுவலி நான் பரிகாரத்த முடிச்சிட்டு ரொம்ப ரசித்து பார்த்த திருமணம் அது தான் அப்பறமா நான் குன்னூர் வந்தேனா அப்போ உன் மொபைல தூக்கிட்டு தாரா வந்தா கேம் விளையாடிட்டு இருந்தா பட் நான் அவ விளையாடுறத கவனிக்காம, உன் மொபைல அவ கைல இருந்து எடுத்து பெக் போனப்ப உன் ஹோம் ஸ்க்ரீன்ல தான் அந்த தமிழ பார்த்தேன் உண்மையா சொல்லனும்ன்னா ஐ வாஸ் ஷொக்ட். பட் உன் மொபைல டேபுல் மேல வெச்சிட்டு உடனே விசாரிச்சேன். அப்போ எனக்கு கிடைச்ச இன்போர்ம் படி நான் ஒப்ஸர்வ் பன்னிக்கிட்டேன் உங்களுக்குள்ள நடந்த விஷயத்த" என்றான் மிகவும் கேஷ்வலாக, அவன் பேச பேச தொப்பென்று கீழே விழுந்தாள் சக்தி பதறி போன சிவப்ரஷாத் "ஓஹ் கம்மோன்" என்று கத்தியதும் அங்கு வந்திருந்த டாக்டர்ஸ் மற்றும் நோயாளிகள் என்று அனைவரும் குழம்பி தான் போனார்கள் அனைவரூம் வருவதை கண்ட சிவா உடனே தன்னை சிலையாக்கி கொண்டு நிமிர்ந்து நின்று விட்டான்

ஓடி வந்த டாக்டர்ஸ் யாருக்குமே சிவாவிடம் என்னாச்சி என்று கேட்க தைரியமில்லை எனவே "சக்தி கம்மோன் எழுந்துருங்க" என்றும் வேரு ஒருவன் "ஓபன் யுவர் அய்ஸ் சக்தி" என்று விதம் விதமாக கத்தி கொண்டு இருந்தனர்.... ஒரு டாக்டர் தண்ணீருடன் ஓடி வந்து அவள் முகத்தில் நீர் தெளிக்க ஆரம்பிக்கவும் சக்தி மெது மெதுவாக கண் விழிக்க ஆரம்பித்தாள். இதற்கு மேல் அவ்விடம் நிற்க பிடிக்காது வேக வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான் சிவா.

விழித்தவள் கண்களை உருட்டி உருட்டி சிவாவை தேடினாலும் மனதெங்கும் தமிழின் பெயரையே ஜபித்தவளாக தான் இருந்தாள். அங்கிருந்தவர்கள் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லியும் எந்த சலுகையை ஏற்று கொள்ளாது வேலையை கவனித்தாள் சக்தி.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now